சில ஆயிரம் ரூபாயில் துவங்கிய அமித்ஷா மகனின் நிறுவனம் ஒரே ஆண்டில் பலகோடிகள் லாபம் ஈட்டிய விவகாரம் இன்றளவும் விசாரணையில் இருக்கிறது, இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலின் மனைவி ஒரு லட்சம் ரூபாயில் துவங்கிய நிறுவனம் திடீரென 30 கோடிகளை லாபமீட்டியுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரசு கூறியுள்ளது, ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலின் மனைவி சீமா கோயல் 2009-ஆம் ஆண்டு இண்டர்கான் அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் துவங்கும் போது முதலீடாக 1 லட்ச ரூபாய் போடப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் மும்பையில் உள்ள மலபார்ஹில் பகுதியில் செயல் படாத நிலையிலேயே நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில் மத்தியில் 2014-ஆம் ஆண்டு டில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் அந்த நிறு வனம் செயல்படத் துவங்கியது. அப்போது அந்த நிறுவனத்திற்கு ஆஸிஸ் நிறுவனத் தில் இருந்து 1.59 கோடி கடன் வழங்கப் பட்டது. இந்த நிறுவனம் பியூஷ்கோயல் 2010-வரை தலைவராக இருந்த நிறுவன மாகும். தற்போது அதன் தொழில் ஆலோசகராக இருந்துவருகிறார்.
பியூஷ்கோயல் தலைவராக இருந்த ஆஸிஸ் நிறுவனம் ரூ650 கோடியை பல பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி அதை கட்டாமல் விட்டதால் அது வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டது, அதாவது கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது ஆஸிஸ் நிறுவனத்தின் தலைவராக பியூஷ்கோயலின் சகோதரர் பிரதீப் உள்ளார். இந்த நிலையில் திடீ ரென்று சீமா கோயல் நிறுவன பங்குகள் 10,000 லிருந்து 30,000 ஆயிரமாக உயர்ந்தது.
நாடு முழுவதும் பெரும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆட்குறைப்பை நிகழ்த்தி, மேலும் வருவாய் இழப்பால் நிறுவனத் தையே மூடவேண்டிய சூழல் உருவாகி யுள்ள நிலையில் பியூஷ்கோயல் மனைவி யின் நிறுவன பங்குகள் மட்டும் 30,000 ரூபாய்க்கு எப்படி உயர்ந்தது என்று காங் கிரசு கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி விலையை உயர்த்தியுள்ளார்.
பங்குவிலைகளை உயர்த்துவதன் மூலம் நிறுவனத்தின் பெயரில் கடன்வாங்க முடியும், இதனால் பங்குவிலைகளை உயர்த்தியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரசு செய்தித் தொடர்பாளர் பவன்கேடா கூறும்போது, “ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தன்னுடைய சுயலாபத்திற்காக தன்னுடைய நிறுவனத்திற்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளார். நிறுவனங்களின் செலவுகள் அன்றாடம் அதிகரித்து வரும் நிலையில் இவரது நிறுவன பங்குகள் அதிக விலைக்கு விற்பனை செய்தது எப்படி? இப்படி மதிப்புக்கூட்டப்பட்டு பங்குகள் விற்பனை செய்வது தொடர்பில் பங்கு வர்த்தக ஆணையத்தில் பியூஸ் கோயலின் தலையீடு இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இவர் 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தனது இயக்குநர் பதவியை தனது மனைவி பெயரில் மாற்றி விட்டு அத்தோடு அனைத்துப் பங்குகளையும் தனது மனைவி பெயரில் மாற்றியிருந்தார். மேலும் இந்த நிறுவனம் 2008 முதல் 2017-ஆம் ஆண்டுவரை எந்த ஒரு லாபத்தையும் ஈட்டவில்லை, அப்படி இருக்க செயல்படாத நிறுவனத்தின் பங்குகளின் மதிப்புகள் எப்படி உயர்ந்தன? இது ஒருவகையில் அமித்ஷா மகனின் நிறுவனத்தைப் போன்று பியூஷ் கோயல் நிறுவனமும் ஒரே ஆண்டில் பலகோடிகளை எந்த ஒரு லாபமீட்டும் தொழில்களைப் பார்க்காமல் உடனடியாக அதிக லாபம் ஈட்டியுள்ளது இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது” என்று காங்கிரசு தலைவர் பவன்கோடா கூறினார்.