பணத்திற்கு விலைபோன ஊடகங்கள்...!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மேலும் இந்துத்துவப் பிரச்சாரம் மட்டும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூற, அதற்கு அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவிக்க பேக்கேஜ் ஒப்பந்தம் போடப்படுகிறது.

நொய்டா ரெட் எஃப்.எம். அசிஸ்டென்ட் மேனேஜர் ஷிவ் மங்கள் அகில இந்திய அளவில் இந்துத்துவ ஆதரவு நிகழ்ச்சி களை நடத்த ஒப்புக்கொள்கிறார். உத்தரப் பிரதேசத் தேர்தலிலும் குஜராத் தேர்தலிலும் பிஜேபிக்கு சன் குரூப்பின் ரெட் எஃப்.எம். ஏற்கெனவே பிரச்சாரம் செய்திருப்பதாகவும் கூறுவது வீடியோ பதிவுகளில் உள்ளது.

தினமலர்

இதே போன்று கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையாளர் புஷ்ப் ஷர்மா, ஆச்சரியா அடல் என்ற பெயரில் தினமலரின் மார்டின் அவர்களை சந்திக்கிறார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் இந்துக் கடவுளான கிருஷ்ணாவை பற்றியும், பகவத் கீதை பற்றியும் வெளியிட்டு, அதன் மூலம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியை பிம்பப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு பணம் தருவதாகவும் கூறுகிறார். உடனே மார்டின், தினமலரின் பிசினஸ் மற்றும் டெக்னிகல் டைரக்டர் எல். ஆதிமூலம் அவர்களிடம் அழைத்துச் செல்கிறார். உங்கள் விசயமாக மார்டின் சொன்னார் என்றும், நாங்கள் பா.ஜ.க வின் சித்தாந்தத்தோடு பயணிப்பவர்கள் தான். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா மீது நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள் என்று கூறுகிறார் ஆதிமூலம்.

 

மேலும், கடந்த நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்பே, பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் மீடியாக்களை அழைத்து பேசினார். அதில் நாங்களும் ஒருவர். டில்லியிலும், கோயம் புத்தூரிலும் மோடியை சந்தித்தோம். 1 மணி நேரத்தில் 45 நிமிடம் எங்களுக்கு மட்டுமே ஒதுக்கினார் மோடி என்கிறார். எனது தந்தையும் நிதின் கட்கரியும் நெருங்கிய நண்பர்கள். அவர் தமிழ்நாடு வந்தால் என் தந்தையுடன் இரவு உணவு அருந்தி விட்டே செல்வார் என்றும் கூறுகிறார்.

நாங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். உதாரணமாக மோடி ஜி படம் மீது கேமராவை வைத்தால் மோடி ஜியின் குரல் கேட்கும். எங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிறந்த பங்களிப்பை தருகிறோம் என்கிறார். உடனே கோப்ரா போஸ்ட் பத்திரிக்கையாளர் மார்டினிடம் பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கை அனுப்புமாறு கேட்ட வாறு முடிகிறது அந்த வீடியோ பதிப்பு.

பல ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற அம்பலப்படுத்துதல் கள் கொட்டை எழுத்துத் தலைப்பு செய்திகளுடனும் பொது மக்கள் ஆவேசத்துடனும் மிகப் பெரும் தேசிய ஊழலாக வெடித்திருக்கும். ஆனால், இங்கு இந்தியாவில் தி வயர், ஸ்க்ரோல், தி பிரின்ட் உள்ளிட்ட ஒரு சில இணைய ஊடக அமைப்புகளே இந்த விஷயத்தை விரிவாகக் கையாண்டுள்ளன.

இந்தியாவில் நிலவும் ஊடகச் சுதந்திரம் குறித்து, குறிப்பாக பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது இச்சுதந்திரம் நில வுகிறதா என்பது குறித்த கலக்கமுறச் செய்யும் சந்தேகங்களை இது எழுப்புகிறது என்பதிலும் கேள்விக்கு இடமில்லை. உலகின் மாபெரும் ஜனநாயகம் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான தரவரிசைப் பட்டியலில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே ஒரு தேசிய வெட்கக்கேடு. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இந்தியா இந்த தரவரிசையில் மேலும் கீழே விழும் என்பதில் அய்யமில்லை.

நன்றி: ‘அரசியலின் புதிய பாதை’, ஜூன் 1-15, 2018

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner