நெஞ்சு பொறுக்குதில்லையே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொள்ளையடிக்கும் கோச்சிங் மய்யங்கள்

இந்திய மருத்துவக் கவுன்சில் கொடுத்த புள்ளிவிபரங்களின்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835, இந்திய முழுவதும் திறந்திருக்கும் பிரபல தனியார் பயிற்சி மய்யங்களில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை: 61649,  அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங் களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யங்களில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

இதில் முதல்பக்கம் விளம்பரம் கொடுத் திருக்கும் ஆகாஷ் என்ற தனியார் பயிற்சி மய்யத்தின் கட்டணம் ஓராண்டு நேரடி பயிற்சி ரூ.1,36,526, இரண்டு ஆண்டு நேரடி பயிற்சி ரூ.3,33,350, கோடை விடுமுறை மாதக் கட்டணம் ரூ.32,804. அதாவது 12ஆம் வகுப்பு  விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய கட்டணம் மட்டும் ரூ.32,804. குறைந்தபட்சம்  ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே யாரும் நீட் தேர்வு பயிற்சிக்கு போய், படித்து, நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் நுழையமுடியும்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையில் ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளியில் தான். பெற்றோர் இருவருமே டாக்டர்கள். கீர்த்தனா படித்தது சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடைய வில்லை. அவர் 12ஆம் வகுப்பு முடித்த ஆண்டு 2015 ஆகும்.

அதாவது சென்னையில் பெரிய பள்ளி யில் சிபிஎஸ்இ முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் லட்சக்கணக் கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். ஊடகவியாளர் பேட்டி யின் போது அவரை சுற்றி பயிற்சி மய்ய ஆசிரியர்கள் தங்களது பயிற்சி மய்ய வாசகங்கள் அடங்கிய பட்டையை கழுத்தில் அணிந்து கொண்டு நின்றனர்.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக் கல்லூரிகள் மருத் துவப் படிப்பு படிக்க ஆண்டுக் கட்டணம் கூட ரூ.32000 கிடையாது. ஆனால் ஆகாஷ் பயிற்சி வகுப்பு ஒரு மாத கட்ட ணம்  மட்டும் ரூ.32000/-. மத்திய அரசின் ஊதுகுழல்களும் இந்துத்துவ அமைப்பு களும் தகுதி திறமை என்று நம் மீது  நீட்டைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழக மாணவர்கள் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பும் நிகழ்கிறது.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசுக் கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத்தான் போட்டியிட்டார்கள். அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக் கும் இருந்தது. +2 தேர்வில் அனிதா 1175/1200, பிரதீபா 1125/1200 ஆனால், நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களை படுகொலை செய்து விட்டார்கள்.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தைக் கொண்டு வருவதல்ல, பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர் தவிர வேறு யாரும் மருத்துவர் ஆகக் கூடாது என்பதுதான்.

நீட்டை தமிழகம் மட்டும் எதிர்க்க வில்லை, மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடுமையாக எதிர்த்தவர்தான். முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும்,தற்போது அதை முழுக்க முழுக்க நடைமுறைப் படுத்துவதும் மோடிக்குப் புதிதான ஒன்றல்ல. ஆதார் அட்டை, ஜிஎஸ்டி, நீட் இது மூன்றுமே குஜராத் முதல்வராக இருந்தபோது மோடியால் கடுமையாக எதிர்க்கப்பட்டவைதான். தமி ழகத்தில் அனிதாவும் பிரதிபாவும் எடுத்த மதிப்பெண்கள் வெறும் சாதாரண மதிப் பெண்கள் அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனிய மனுதர்ம அடக்குமுறையை எதிர்த்து வாங்கிய மதிப்பெண்கள் ஆகும் - அந்தக் குழந்தைகளின் மரணங்கள் ஒட்டு மொத்த தமிழர்களுக்கு உயிர் வலியைத் தரு கிறது. அதற்காக இந்தத் தேர்வு முறையை தமிழர்கள் எதிர்க்கிறார்கள். பரம்பரை பரம் பரையாக கல்வியைத் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போருக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேது மில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மதிப் பெண்கள் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம். தமிழக மக்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்த மான  23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்க ளுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறார்கள். தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாக சொல்லி யிருக்கிறது.

பார்ப்பனமயப் பல் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு ‘பஞ்சம, சூத்திர’ மக்கள் படாதபாடு படுகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner