தந்தை பெரியார் அவர்களின் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்பற்றி டாக்டர் மு.வ.

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உணவு விடுதியின் தலைப்பில் கொட்டை எழுத்துக்களில் ஜாதியின் அறிகுறி இருப்பது வேறு எந்த நாகரிக நாட்டிலும் காண முடியாத மாசு ஆகும்!

இந்த மாசைப் போக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் ஈ.வெ.ரா. நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், ஜாதியின் வாலை ஒழித்ததுபோலவே, உணவு விடுதி களின் பெயரில் உள்ள 'பிராமணாள்' என்ற சொல்லையும் எடுத்து விடு வார்கள் என எதிர்பார்த்தேன்; எதிர் பார்த்தவாறு நடக்கவில்லை.

உணவு விடுதிகளில் பிராமணரே இருந்து நடத்தும் விடுதிகள் சில; பிராமணர் அல்லாதார், பிராமணரைக் கொண்டு உணவு சமைக்கச் சொல்லி, தாம் தலைவராய் உட்கார்ந்து சீட்டுப் பெற்று, பணம் பெற்று வரவு - செலவு கணக்குகள் பார்த்து நடத்தும் விடுதிகள் பல.

அந்தச் சில விடுதிக்காரரும் திருந்த வில்லை. இந்தப் பல விடுதிக்காரரும் திருந்தவில்லை! சொல்லாமலேயே செய்யவேண்டிய சீர்திருத்தக் கட மையைச் சொல்லியுமே, செய்ய வில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். ஜாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்த முடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்ந்து வருந்த நேரும். அன்று பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.

- டாக்டர் மு.வரதராசனார்

(தந்தை பெரியார் 79 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசியா வாழ் தமிழர்கள் வெளியிட்ட மலரில் இடம்பெற்ற கட்டுரையிலிருந்து)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner