அமர்நாத் "பனி லிங்க" மோசடியோ மோசடி!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பக்தியின்பெயரால் மக்களின் அறியா மையைப் பயன்படுத்தி கோயில்கள், விழாக்கள், சடங்குகள் என்பதை மக்களி டையே திணித்து, அதன் பயனை பெரிதும் மத குருமார்கள் அறுவடை செய்து பாமர மக்களை சுரண்டி வருகிறார்கள்.

குறிப்பாக இந்து மதத்தில் கடவுள்கள் அவதரித்த (பிறந்த) இடம், காட்சி கொடுத்த இடங்கள் என்றெல்லாம் கட்டுக்கதைகளை புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்டு பன்னெடுங்காலமாக வருணாசிரமத்தை திணித்து, பிறப்பாலேயே ஏற்றத் தாழ்வு களைக் கற்பித்து, அதைக் கற்பித்தவன் கடவுளே என்றும், யாராலும் அந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்றவே முடியாது என்றும் கூறிக்கொண்டு, வருணாசிரமத்தின் அடிப்படையில் பார்ப்பனர்களே உயர்ந்த வர்கள் என்றும் மற்றவர்கள் அவர் களுக்குக் கீழானவர்கள் என்றும் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்துவிட்டார்கள்.

மன்னராட்சிக் காலக்கட்டத்தில் வருணா சிரமத்தை ஏற்றவர்களே முடி சூட்டிக் கொண்டனர். ஆகவே, மன்னர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்து வந்தது.

இப்படியேதான் ஆளும் அதிகார வர்க்கத்தில் ஊடுருவும் பார்ப்பனர்கள், தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்வதுடன், அப்பாவி மக்களையும் அதிகார ஆணவத்தின் துணையுடன் சுரண்டி வந்துள்ளனர்.

எப்பொழுதெல்லாம் மக்களிடையே பக்தி மோகம் பக்தி போதை குறைகிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுளர்களின் அற்புத கட்டுக்கதைகள் பார்ப்பனர்களால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படும். இப்படித்தான் புராணக்கதைகள் தொடங்கி, பிள்ளையார் பால் குடித்த கதை வரை  தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது.

பக்தி வணிக நோக்கில் வட இந்தியாவில் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கான  பக்தி சுற்றுலா இடங்களாக காசி, பூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் குறிப்பிட்டு பக்தி சுரண்டல் அறுவடைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக கூறப்பட்டுவருவதுதான் அமர்நாத் பனி லிங்கம்

அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழைமையானதாக கூறப்படுகிறது.

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் போன்று பனிக்கட்டி அமைந் துள்ளது. இது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது.

வாழ்வின் ரகசியத்தை கூறிய இடமாம்

இந்துப் புராணங்களின்படி இங்குதான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார் வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படு கின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளனவாம்.

இக்குகை கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், சிறீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இராணுவத்தின் பாதுகாப்பில் அமர்நாத் குகைக்கோயில்

தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல் களுக்கு இலக்காகலாம் என்ற காரணத் தினால் இக்கோயில் இந்திய இராணுவத் தினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே, மத்திய அரசின் முன் அனுமதி யைப் பெற்றே இங்கு செல்ல முடியும்.

அமர்நாத் பனிலிங்க மோசடி

சமூக ஊடகங்கள், இணையத்தில் பக்தி மூடத்தனங்களை பரப்புவோர் அற்புத பனிலிங்கம் என்றும், சுயம்பு பனி லிங்கம் என்றும் அதன் பரப்புரைகளில் கூறிவரு கிறார்கள். அவ்வப்போது பனி லிங்கம் உருகிப்போவதும், அமர்நாத் செல்லும் வழியில் பனிச்சரிவு உள்ளிட்ட காரணங் களால் அமர்நாத் பக்தி சுற்றுலா  பயணிகள் பாதிப்படைவதும் தொடர் கதையாகி வருகிறது. அறிவியல் உண் மைகள் அறியாதவர்கள் அற்புதமாக கருதும்படி, ஊடகங்கள் உண்மை அறி வியல் தகவல்களை இருட்டடிப்பு செய்து, அற்புதங்களை மட்டுமே வெளியிடும் அவலநிலை தொடர்ந்து கொண்டிருக் கிறது.

அமர்நாத் பக்தி சுற்றுலா, இராணுவ பாதுகாப்பு என்பதன் பெயரால் மக்கள் வரிப்பணம் பாழாகிறது.

அறிவியல் என்ன கூறுகிறது? பனிப்படிவம் உருக்கொள்வது எப்படி?

சுண்ணாம்புக் கல்லினால் ஆன குகை களில் பனி நீர் வடிவதால் இப்படிப்பட்ட வடிவம் உருவாகிறது. மேலிருந்து கீழே பனி நீர் சொட்டுவதாலும், கீழிருந்து மேல் நோக்கி தூண்கள் போல, கம்பிகள் போல உருவாகும் பனிப் பாறைகள் வளர்வ தாலும் உருவாகும். குகையின் கூரைப் பகுதியில் இருந்து தொங்கும் படிவத்திற்கு ஸ்டாலக்டைட் (Stalactite) என்றும், குகையினுள் நிலத்தினின்றும் மேல்நோக்கி வளர்ந்து உருவாகும் படிவத்திற்கு ஸ்டாலக்மைட் (Stalagmite) என்றும் அறிவியலாளர்கள் ஆய்வு செய்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்ட குகைகளில் கசிவு நீரானது குகையின் தட்பவெப்பத்துக்கேற்ப சீரற்ற உருளை வடிவத்தில்  (Cylinderical shape) படிவ மாகிறது. மேலிருந்து கீழாக  உருவாகின்ற படிவத்துக்கு கசித்துளிவீழ் (Stalactite) என்றும், கீழிருந்து மேலாக உருவாகின்ற படிவத்துக்கு கசித்துளி படிவு (Stalactite) என்றும் அறிவியல் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற படிவங்கள் குறிப்பிட்ட மய்யப் புள்ளியைக் கொண்டு உருளை வடிவத்திலேயே உருவாவதற்கான ஆராய்ச் சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை அறிவியலாளர்கள் வெளியிட் டுள்ளனர்.

சுண்ணாம்புப்பாறை, கனிமங்களைக் கொண்ட குகைப் பகுதிகளில் தண்ணீர் ஓடுகையில், அக்குகைப் பகுதிகளில் உள்ள தட்ப வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய வற்றால், கனிமங்கள் தண்ணீருடன் சேர்ந்து, தண்ணீரின் நீரோட்டப் பாதையில், குகைப் பகுதிகளில் படிவங்களாக உருப்பெரு கின்றன.  கசித்துளி வீழ்படிவு  ஸ்டாலக் டைட்டு மற்றும் கசித்துளிபடிவு ஸ்டாலக் மைட் ஆகியவை காணப் படுவதை ஸ்பிலியோ தெம் (Speleothem) என்று அறிவியலாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.

கசித்துளி வீழ்படிவு-ஸ்டாலக்டைட்டு

'சிந்தும் துளி' (to drip) என்று பொருள் தருகின்ற ஸ்டாலக்டோஸ் (stalaktos) எனும் கிரேக்க சொல்லிலிருந்து ஸ்டாலக் டைட் (Stalactite) எனும் ஆங்கிலச் சொல் உருவானது.   தண்ணீரில் கரையக்கூடிய கனிமங்கள், சேறு, மணல் உள்ளிட்டவை குகையினுள் மேற்பரப்பில் சேர்ந்து ஈரப்பதம், தட்ப வெப்பத்துக்கேற்ப பனிப்படிவமாகி தொங்கும் நிலை உருவாகிறது.

குகையினுள் மேற்பரப்பில் பாறை களுக்குள் தண்ணீர் செல்கையில் கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாகிறது- அதன்மூலம் கார்பானிக் அமிலம் பாறையை அரித்துச் செல்கிறது. கால்சைட் எனும் கார்பனேட் கனிமம் அல்லது கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளாக மாறுகிறது. தண்ணீர் குகையினுள் மேற்பரப்பு முழுவது மாக பரவி, பாறையின் அனைத்து பகுதியிலும் கால்சைட்டாக பல வடிவங்களில் மாறுகிறது. அதுவே உறைபனியாகிறது.

ஸ்டாலக்மைட்டு படிவங்கள் உருவாவது குறித்த ஆய்வுப் படங்கள்

ஸ்டாலக்டைட்டு நீளமாக வளர்ந்து, கால்சைட்டுகள் பெருகச்செய்கின்றது. இந்த வளர்ச்சி மிகவும் மெதுவாக படிப்படியாக நடைபெறுகின்றது. 10 செ.மீ. உருவாவ தற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.

சில ஸ்டாலக்டைட்டுகள் காலத்தை அறிய கதிர்வீச்சு முறையில் ஆய்வு மேற்கொள்ளும் போது, 1,90,000 ஆண்டுகள் பழைமையானதாக இருப்பது தெரிய வந்தது.

ஸ்டாலக்டைட்டு வகைகள்

சிமெண்ட் கான்கிரீட், பனிக்கட்டி, எரி மலை, சுண்ணாம்புக்கல்  உள்ளிட்ட பல்வகை ஸ்டாலக்டைட்டுகள் உள்ளன. தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் அல்லது பாலங் களின் கீழ்ப்பகுதி களில் ஸ்டாலக் டைட்டுகள் உருவாகின்றன. குகைப்பகுதி களைவிட அதிவேகமாக இது போன்ற ஸ்டாலக்டைட்டுகள் உருவாகின்றன.

கசிவுநீர்த்துளி

குளிர் தட்பவெப்பத்தில் பனிக்கட்டி களால் உருவாகின்ற ஸ்டாலக்டைட்டுகள் பொதுவாக உறைபனிமணி (மிநீவீநீறீமீ) எனப்படும்.

எரிமலை ஸ்டாலக்டைட்டுகள்

எரிமலைக்குழம்பாக வெளியேறும் போதும் ஏற்கெனவே குறிப்பிட்டுள் ளதைப் போன்றே ஸ்டாலக்டைட்டுகள் உருவாகின்றன. ஆனால், அதிவேகமாக வாரங்கள் அல்லது மணிக்கணக்கிலேயே உருவாகிவிடுகின்றன. இந்த ஸ்டாலக் டைட்டுகள் வளர்வதில்லை. லாவா எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியேறு கின்றபோது மட்டுமே ஸ்டாலக்டைட் டுகள் உருவாகின்றன.

சுண்ணாம்புப்பாறைகள் ஸ்டாலக்டைட்டுகள்

குகைகள், குகைபோன்ற பகுதி களிலும் சுண்ணாம்புப்பாறைகள் ஸ்டாலக் டைட்டுகள் சர்வசாதாரணமாக உரு வாகின்றன.

வெளிநாடுகளில் உருக்கொள்வது லிங்கமா?

ஏதென்சு நகரின் அருகில் கிரீஸ் நாட்டிலும்,  நியூசிலாந்து நாட்டின் வைடா மோ குகைகளிலும்  மெலிதாகவும், மொத்த மாகவும் நூற்றுக்கணக்கில் ஸ்டாலக் டைட்டுகள் உருவாகின்றன.

பன்னாட்டளவில் மிக நீளமான ஸ்டாலக்டைட்டுகள்

லெபனானில் ஜெயிட்டா க்ரோட்டோ பகுதியில் அமைந்துள்ள ஸ்டாலக்டைட் டுகள் சுமார் 11 மைல் நீளத்தில் வடக்கு பெய் ரூத்வரை அமைந்துள்ளது. சுண்ணாம்புப் பாறை குகை 5.6 மைல் நீளம் உள்ளது. 1836ஆம் ஆண்டில் படகுப் பயணத்தின் போது இக்குகை கண்டு பிடிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில் 200அடிக்கும் மேல் உள்ள குகையின் மேல்பகுதியை அறிவிய லாளர்கள் கண்டு பிடித்தார்கள். இந்த குகையின் ஒரு பகுதி சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. குகைக்குள் வெண்ணிற அரங்கப் பகுதி யாக 27 அடி நீளத்தில் அமைந்துள்ளது.

ஸ்டாலக்மைட்டுகள்

குகை மற்றும் குகைப்பகுதிகளின் நிலப் பரப்பிலிருந்து  மேல்நோக்கி வளருகின்ற சிறு குன்று அல்லது மேடு போல் உரு வாகிறது. அதன் உச்சிப்பகுதியில் கனி மங்கள்  படிந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று  ஸ்டாலக்மைட்டாக உருப்பெருகின்றன.

துளி அல்லது சிந்துதல் அல்லது சொட்டுதல் எனும் பொருளில் கிரேக்க சொல்லிலிருந்து ஸ்டாலக்மைட் சொல் உருவானது. குகை அல்லது குகைப்பகுதி களின் நிலப்பரப்பிலிருந்து மேல்நோக்கி வளர்வது ஸ்டாலக்மைட்டுகள் ஆகும்.

ஸ்டாலக்டைட்டுகள் அமைந்துள்ள இடங்களில்  பொதுவாக அவற்றுக்கு கீழ்ப்பகுதிகளில் அமைந்துள்ளவையே ஸ்டாலக்மைட்டுகள் ஆகும். குகைப் பகுதி யின் நிலப்பரப்பிலுள்ள தண்ணீர் அடர்த்தி யான கால்சைட்டை உருவாக்குகிறது.

கசிவுத்துளியைப்போல் உறைபனிமணி போல் காணப்படாமல், முதலில் மேடு, குன்றுகள் போல் உருவாகி, அதன் பரப்பு விரிவடைந்து வளர்ச்சி பெற்று உயரமான ஸ்டாலக்மைட்டுகளாக உருவாகின்றன.

சுண்ணாம்புப்பாறைகளில் ஸ்டாலக் டைட்டுகள் உருவாவதைப் போலவே ஸ்டாலக்மைட்டுகள் 10 செ.மீ. அல்லது அதற்கும் குறைவாக உருவா வதற்கு ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிமெண்ட் கான்கிரீட், பனிக்கட்டி, எரி மலை, சுண்ணாம்புக்கல்  உள்ளிட்ட பல் வகை ஸ்டாலக்டைட்டுகள்போன்றே பல வகையான  ஸ்டாலக்மைட்டுகள் உள்ளன.

பன்னாட்டளவில் மிகப் பெரிய ஸ்டாலக்மைட்டுகள்

பன்னாட்டளவில் மிகப்பெரிய படிவமாக (Stalagmite) 204 அடி உயரத்தில் கியூபா நாட்டில் மார்டின் இன்பியர்னோ குகையில் காணப்படுகிறது. இக்குகை  2,600 அடி நீளம் கொண்டது. கியூபா நாட்டில் தெற்கு மத்தியப்பகுதியில் உள்ள தீவில் யாக னாபோ பள்ளத்தாக்கில் இந்த குகை 1967ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அதனைப் பாதுக்காக்க முடிவு செய்த கியூபா அரசு 1990ஆம் ஆண்டில் மார்டின் இன்பி யர்னோ குகை பகுதி தேசிய நினைவு சின்னமாக   அறிவித்தது. அறிவியலா ளர்கள் மேலும் அப்பகுதியை பாதுகாப்பதற் கான நட வடிக்கைகள் கூடுதலாக எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஏனென் றால், சுற்றுலாப்பயணிகள் அதிகம்பேர் வருகை புரிவதால், இயற் கையான அமைப்பு பாதிக்கப் படும் என்று கருதுகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner