வா பகையே வா!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் நடந்தது

மாநாடா-

கொள்கை சேனைக்

கடலின்

பாடி வீடா?

 

எங்கிருந்து எழுந்தது

இந்த சேனை?

தந்தை பெரியார் என்னும்

தேவையின்

கொப்பூழ்க் கொடியில் உதித்ததே இந்த யானை!

 

ஆரிய ஆணவ

ஆதிக்கக் காட்டை

துவம்சம் செய்யும்

தானைத் தலைவர்

வீரமணியே என்று

காலத்தாய்ப் பிறப்பித்த

கட்டாய ஆணை...!

 

தந்தை பெரியார் இல்லையே

தாடியை உருவி

தாண்டிக் குதிக்க!

 

புரட்சிக்கவிஞர்

இல்லையே - புதுப்

புறநானூற்றைத் தீட்டிக்காட்ட!

 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கண்டிட

வாய்ப்பில்லையே

கருஞ்சிறுத்தைப் பட்டாளத்தின்

கர்ச்சனையைக்

கேட்டு மகிழ!

 

வா பகையே வா!

உன் கடைசி

வரியை எழுதி முடிக்கக்

காத்திருக்கிறோம்!

 

காவியா?

கருஞ்சட்டையா?

களத்தில் காண்போம்,

வா பகையே வா என்று

அசைந்தாடும் கொடிக்கடலின் ஆர்ப்பரிப்புதான்

என்னே, என்னே!

 

திராவிட சித்தாந்த

தீப்பந்தத்தை

தூக்கிப் பிடிக்க

திகு திகுவென்று

தோள்புயல் தூக்கி

தோட்டாக்களாக

துடித்தெழுந்ததே -புது

ரத்தங்கள்!

 

தலைவர் ஆணையிட

ஒழுக்கத்தின் ஆவணமாக

இலட்சியத்தின் பிளிறலாக

உறுதிமொழிகள் பத்தினை

உரக்க முழங்கிய

வாலிபப்

பீரங்கிகளை - வேறு

எங்கே காண்போம்?

 

சம்பூகனா? ராமனா?

புது ராமாயணம்

படைப்போம்!

சம்பூகன் கையில் போர்வாள்

சாம்பலாகும் அவாளின் கடைக்கால்!

 

தமிழ் தேசியப் போர்வையில்

தறி கெட்ட தம்பிகள்

அறிவின்

முகத்தைக் கழுவி

திருந்தித் திரும்பிட

அழைப்பிதழ் கொடுத்த

அரிய மாநாடு!

 

எஞ்சிய மாணவர்காள்!

பெரியார் ஆணை ஒன்றே

வஞ்சகரை வீழ்த்துகின்ற

வாய்மையின் விளக்கு!

வாரீர், வாரீர்

முடிக்க வேண்டியவை

முடிதரிக்க வேண்டியவை

ஏராளம் உண்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner