குங்குமம், விபூதி பற்றி...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்!

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்து தான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்கு மத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச்சியே பண்ணி தீஸிஸ்கூட சப்மிட் செஞ்சிருக்காங்க.

கலப்பட விபூதி பத்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி. பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒருசிலக் குடும்பங்கள் பாரம்பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு.

இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற்பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார்.

(நன்றி: ஜூனியர் விகடன், 26.10.1997)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner