தீபாவளி கொண்டாட தயாராம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்மம்மா கடுந்துயரம்!

கடுந்துயரம்!!

எங்கள் கண்ணீருக்கும்

அதிர்ச்சியால் மாரடைப்பு!

கண்ணீர்க் கடலும்

காய்ந்ததம்மா!

 

அண்ணாவை

இழந்தோம்

அய்யா இருந்தார்

தாங்கிப் பிடித்தார்...

பெரியாரையும்

இழந்தோம்

சூன்யமாயிற்று

சூரிய மண்டலமே!

இப்பொழுதோ கலைஞரில்லாப்

பெரியார் மண்

 

இன எதிரிகள்

எதிர்ப்பு யாகங்களை

மூட்டிவிட்டார்

நோட்டம் பார்க்கின்றார்

வாலை ஆட்டி

 

அன்று இரணியன்

அழித்தான்

ஆரிய யாகக் குண்டங்களை!

ஆம் மீண்டும்

ஆரிய - திராவிடப்போர்!

முரசொலிக் கட்டும் -

முரசொலிக் கட்டும்!

 

கலைஞரின்

மரண வோலையை

கண் குத்தியாய்

எதிர்பார்த்து எதிர்பார்த்து

தீபாவளி கொண்டாட

காத்துக்கிடந்தது

காகப்பட்டர் கூட்டம்

 

அன்று அவாளுக்கு

எதிரி

நரகாசுரன்!

ஆம் அசுரனை

அழித்த அந்நாள்தானே

தீபாவளி!

 

இன்று அவாளுக்கு

இன எதிரி

மானமிகு

சுயமரியாதைக்காரரான

கலைஞர்!

மரண வாசலை

அவர் முத்தமிட்ட நாள்

அக்ரகாரத்துக்குத்

தீபாவளியாம்!

 

தீபாவளியின்

தாத்பரியமாம்

அர்ச்சனைத் தட்டின்

மகிமை புரிகிறதா?

பால் ஊற்றி

பார்ப்பனீயத்துக்குப்

பால் வார்க்காதீர்!

 

நெற்றியில்

நீறுபூசி

நீர்த்துப் போகச்

செய்யாதீர்

திராவிடத் தத்துவத்தை!

 

குங்குமம் பூசி - நம்

கொள்கையின்

குருதியைக் குடிக்கத்

துடிக்காதீர்!

 

இவற்றையெல்லாம்

மட்டை ரெண்டு

கீற்றாகக்

கிழித்தவர் நம் கலைஞர்

 

இராமன் எந்த

பொறியியல் கல்லூரியில்

படித்தான் என்று

புலிநகக் கேள்வியால்

கிழித்தவர் நம் கலைஞர்!

 

பாராட்டிப் போற்றிவந்த

பழைமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால்

இடியுது பார் என்ற

கலைஞர் தம்

கனத்த போர்க்குரல்

கேட்கலியா?

 

கழுத்தறுக்கும்

ஆரியக் காட்டையழித்து - புதுக்

கோட்டை எழுப்புவோம்

வாரீர்!

 

கலைஞர்

குருதி தோய்ந்த

கழகக் கொடியை - அதன்

உச்சியில் ஏற்றுவோம்!

 

அய்யோ கருணாநிதி

மறையவில்லையே!

என்று

ஆரியம் கதற வேண்டும்

 

காளையே

நாளைக் காலையே

புறப்படு - புறப்படு!

 

மானமிகு

கலைஞருக்கு

நாம் சூட்டும்

கனபரிமாண

பெரியார் மாலை

அதுதான் - அதுதான்!

வாழ்க கலைஞர்!

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner