நவீனமான பெண்குறித்து... - இதுதான் சிபிஎஸ்இ புத்தகத்தின் வரையறை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்மையில் சமூக ஊடகங்களில் சிபி எஸ்இ பாடத்திட்ட புத்தகம்குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் வெடித்து கிளம்பி யுள்ளன.

புராபி சக்ரபோர்த்தி எழுதிய ‘தற்கால கட்டுரைகள் மற்றும் கடிதங்கள்’ (Current Essays and Letters) எனும் புத்தகத்தில் நவீன பெண்கள் (Modern Girl) குறித்த பகுதி யாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

சிபிஎஸ்இ புத்தகத்தில் பிற்போக்கு சிந்தனைகள்

சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ புத்தகத்தில் பெண்கள்குறித்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. நவீன பெண்கள் எனப்படுபவர்கள் எவரும் பொதுநல சிந்தனையுடன் இல்லாமல் பெரிதும் ‘சுய நலனுடன்’மட்டுமே இருப்பார் கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, நவீன பெண்கள் உடைகள்குறித்தும் விமர் சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆண்களைப் போலவே உடை உடுத்த நவீன பெண்கள் முயல்கிறார்கள் என்று குறையாகக் கூறப் பட்டுள்ளது.

நவீன கால பெண் பொதுவாக அதிக அளவில் திறன்மிக்கவளாக, அறிவாளியாக, சிந்தனைமிக்கவளாக, நாகரிகம் மிகுந்தவளாக இருக்கிறாள் என்று தொடக்கத்தில் கூறி, தொடர்ச்சியாக நவீன கால பெண்குறித்து பிற் போக்கான கருத்துகள் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவீன கால பெண்ணானவள் ஆண் களைப் போன்றே நாகரிகத்தை பின்பற்றிட வும், வேலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள் ளவும்  விரும்புகிறாள். மாறிவரும் நாகரிகத் துக்கேற்ப தானும் மாறிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். அவ்வப்போது மாறி வருகின்ற உடை வடிவங்களை மிகவும் விரும்புகிறாள். புதிது புதிதாக வருகின்ற நாகரிக உடைகளையும், பார்ப்பதற்கு கண் களைக் கவருகின்ற உடைகளையும் விரும்பு கிறாள்.

இப்போதெல்லாம் நவீன பெண் வெட்கப்படுவதில்லை. கீழ்ப்படிவதில்லை, வீட்டுக்குள்ளேயே முடங்கி, மற்றவர்களுக் காகவே வாழ்கின்ற ஜீவனாக நவீன பெண் இருப்பதில்லை. வீட்டுக்குள் நான்கு சுவருக் குள் அடைந்து கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை.

பையன்களைப்போலவே மகிழ்ச்சியாக சுதந்திரமாக எல்லாவற்றையும் அனுபவிப்பது தங்களின் உரிமை என்று கோருகிறாள். அன்பான மகளைப்போல், பாசத்துக்குரிய சகோதரியைப்போல் இருப்பதைவிட அவள் தன்னை மட்டுமே மய்யப்படுத்துகின்றவளாக இருக்கிறாள்.

ஜீன்ஸ், பேண்ட்டுகள், கடினமான ஆடை களை விரும்பி அணிகிறாள். அவளுடைய உடைகள் இருப்பில் பலவண்ண சேலை களுக்கு இடமில்லை.

நவீன பெண் திரைப்படம், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை காண்கிறாள். அக்காட்சிகளில் வருவதைப்போலவே, நடிப்பவர்களின் சிகை, உடையலங்காரம், நடை, உடை, பாவனைகளை அப்படியே அவளும் பின்பற்றுகிறாள். காட்சியாக காண் பதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள் கிறாள்.

கேளிக்கைகள், பொழுதுபோக்குகளில் ஆர்வம் கொள்வதா?

நவீன பெண் தன் வாழ்க்கை முழுவதும் அனைத்து விதமான இன்பங்களையும் அனுபவித்திட துடிக்கிறாள். அவள் எந்த ஒரு கேளிக்கையையும் தவிர்ப்பதற்கு விரும்புவதில்லை. விருந்துகள், திரைப் படங்கள், இசைக் கச்சேரிகள், ஆடை அலங்கார அணிவகுப்புகள் என வெளி யுலக நடப்புகள் அனைத்திலும் பங்கேற்க அவள் மிகவும் விருப்பமுடன் இருக்கிறாள்.

நவீன பெண்ணானவள் ஆண்களுடன் சுதந்திரமாகவும், மிக எளிதாகவும் பேசி வருகிறாள். தன்னுடைய உடல்நலன் மற்றும் உடல்அழகுகுறித்து மிகவும் அக் கறையுடன் இருக்கிறாள். நல்ல உடற்கட்டு டனும், அழகாகவும் இருப்பதற்கான முயற்சி களை செய்து வருகிறாள். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள்குறித்து எவ்வித கவ லையும் கொள்ளாமல், விலை உயர்ந்த அலங்காரப்பொருள்களை வாங்குகிறாள். எந்தவகையிலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள்குறித்து சிறிதும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

ஆடை அலங்காரங்கள் செய்வதா?

நவீனகால பெண்ணுக்கு, சந்தைகளில் புதிது புதிதாக வரக்கூடிய நாகரிக ஆடை கள் மற்றும் அதன் வடிவமைப்பாளரின் பெயர்கூட நன்கு தெரிகிறது. அதுவும் புதிய ஆடையை அவர்கள் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே நவீனகால பெண்ணுக்குத் தெரிந்து விடு கிறது. வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இந்த போட்டியில் பங்கு கொள்கின்றனர்.

நாகரிகத்தின் அடையாளங்களாக சந் தைகளில் புதிதாக வெளியாகின்ற ஆபர ணங்கள், ஆடைகள், சிகையலங்காரம், உணவு மற்றும் பானங்கள் அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்கள்,  நடத்தைமுறை களைக் கொண்டுள்ளாள். ஆகவே, அவற் றின் மூலம் விருந்துகள், விழாக்கள், கூட் டங்களில் அழகாக பங்கேற்கிறாள்.

அவளின் கவரும் தோற்றம், உயிரோட் டமான பேச்சுகள், இனிமையான புன்னகை மற்றும் பார்வை, நாகரிக ஆடை என அனைத்தும் எந்த ஒரு விருந்துக்கும்  கூடுதலான அழகாக காணப்படுகின்றன.

விளையாடுவதா?

நவீன கால பெண்கள் கிரிக்கெட், கால் பந்து, பூப்பந்து, கைப்பந்து ஆட்டங்களில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

மலையேற்றம் மற்றும் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறப் பட்ட அனைத்து வேலைகளையும் செய் கிறார்கள். பெண்கள் அனைவருமே தங்களின் வேலைவாய்ப்புகுறித்து கவனம் செலுத்துகின்றனர்.

நவீன கால பெண்கள் தங்கள் இலக்கை எட்டுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் எந்த ஓர் ஆணிடமும் நவீன கால பெண் பேசு கிறாள்.

கடமையை மறக்கின்றனராம்

அதேநேரத்தில் நவீன கால பெண் களில் பெரும்பான்மையர் தங்களின் கட மைகளை ஆற்றுவதில் வேறுநிலையில் உள்ளனர்.  நேசிக்கின்ற மகளாக, மனைவி யாக அல்லது தாயாக கடமையாற்றுவதில் வேறுநிலையிலேயே உள்ளனர்.

அவர்கள் தனிப்பட்ட தங்களுடைய வாழ்வின் அதிகஅளவிலான மகிழ்ச்சிக்கு மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

வளர்ப்பு முறை காரணமாம்

அதற்கு அவர்களின் பெற்றோர்களும் காரணமாவார்கள்.

ஒரு பெண் குழந்தை எப்படி வீட்டி லும், பள்ளியிலும் நடந்து கொள்ள வேண் டும்  என்பதை இளம் வயதிலிருந்தே சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் வளரும்போது அவளின் பெற்றோர், குடும்பத்தினர் பாசமாக இருப்ப தில்கூட மிகவும் கவனமாக இருக்க வேண் டும். அந்த வளர்ப்புமுறைதான் அவளை நாகரிக, நவீனத்துடன் விருப்பத்துக்கேற்ப மட்டுமல்லாமல், பொறுப்புள்ளவளாக வளரச்செய்யும்.  மற்றவர்கள் விரும்புகின்ற வகையிலும், எல்லோரிடமும் அன்புடனும் இருக்கச் செய்யும்.

டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங் களில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள்குறித்த பிற் போக்கான கருத்துகள்குறித்து கண்ட னங்கள் பலமுனைகளிலிருந்தும் வெளியாகிவருகின்றன. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன்  உள்ளிட்ட சமூக ஊட கங்களில் பலரும் தங்களின் கண்ட னத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner