சிலை அல்ல மலை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிலையாய் நின்ற எம்மை

இயங்கவைத்தவன்

சிலையாய் ஆனபின்பும்

இயங்கி வருபவன்.

 

பூதக் கண்ணாடி கொண்டு

செய்திகள் படித்தவன்

பூதங்கள் எங்கெனச்

சொடக்குப் போட்டவன்.

 

துல்லியமாக

உண்மையை அறிந்தவன்

துடிப்புடன் பொய்களைச்

சாடி அழித்தவன்.

 

நாளைகள் நமக்கு

வெளிச்சமாகிட

இருட்டை மேனியில்

தூக்கிச் சுமந்தவன்.

 

இருண்ட பாதையில்

ஒளிக்கதிர் பாய்ச்ச

இன்னுயிர் வாழ்வை

இசைவுடன் கொடுத்தவன்.

 

கைத்தடி ஊன்றி

நடந்த காலையும்

முடங்கிய இனமது

நிமிர்ந்திட உழைத்தவன்.

 

அழுகிய சிந்தனை

அறுத்த மருத்துவன்

அழியாப் புகழுடன்

நிலைத்த பெருமகன்.

 

ஈராயிரம் ஆண்டு

இருட்டை வெளுத்தவன்

ஈரோட்டில் உதித்த

இன்னொரு சூரியன்.

 

- பிருந்தா சாரதி -

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner