பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.12 சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக் கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன் நேற்று வழங்கினார்.

கடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி, சென்னை கடற்கரை யில் இருந்து திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த, 5 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடை சுவர் மோதி இறந்தனர். மேலும் அய்ந்து பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விபத்தில் இறந்த அய்ந்து பேரின் குடும்பத் துக்கு தலா ரூ. 8 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப் பாயம் உத்தரவிட்டது.

இதையொட்டி இழப்பீடு வழங்க, தெற்கு ரயில்வேயால் உரிய தொகை தீர்ப்பாயத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத் தினர் உரிய முறையில் விண்ணப் பம் செய்து இழப்பீடு பெறலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.

அதன்படி, வரைமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் விசாரணை நடந் தது. விசாரணை முடிந்ததைய டுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க தீர்ப்பாய நீதிபதி கண்ணன் டில் லியில் இருந்து நேற்று சென்னை வந்தார்.

அவர், பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்த நவீன் குமார், சிவகுமார், பாரத், வேல் முருகன், சிறீவர்சன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்குரிய ஆணையை வழங்கினார்.

இதேபோல் பலத்த காயம டைந்த விஜயகுமாருக்கு ரூ.3.2 லட்சம், விக்னேஷுக்கு ரூ. 2 லட்சம், முகமது யாசர், நரேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1.24 லட்சம் இழப்பீடாக வங்கி யில் இருந்து பெறுவதற்கான ஆணையையும் கண்ணன் வழங் கினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner