அணுசக்தி துறையில் பணியிடங்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய அணுசக்தித் துறையின் கொள்முதல், பண்டப் பிரிவில் மேல்நிலை எழுத்தர், இளநிலை கொள்முதல் உதவியாளர், இளநிலை பண்டகக் காப்பாளர் ஆகிய பதவிகளில் 34 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி உரிய தளர்வு உண்டு. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக ஆங்கிலத் தட்டச்சு (நிமிடத்துக்கு 30 சொற்கள்), கணினியில் டேட்டா பதிவு செய்யும் அனுபவம், பொருட்கள் மேலாண்மையில் பட்டயப் படிப்பு ஆகியவை இருந்தால் விரும்பத்தக்க தகுதிகளாகக் கொள்ளப்படும்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வானது இரு நிலைகளாக நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர் 2ஆவது கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் விரிவாக விடையளிக்க வேண்டும். இத்தேர்வு ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். மதிப்பெண் 100. தேர்வு 3 மணி நடைபெறும். 2ஆவது கட்டத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

தகுதியுடைய பட்டதாரிகள் www.dpsdae.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்திச் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்


தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் காலிப் பணியிடங்கள்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பணியிடங்களுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப் பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25

பதவி:  அசிஸ்டெண்ட் ரிஜிஸ்டர்- 01

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி:  சூப்பிரடெண்ட்டன்ஸ்- 09

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி:  ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ் - 05

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: அசிஸ்ட்டெண்ட் - 01

பதவி: ஜூனியர் அசிஸ்ட்டெண்ட்  மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 06

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. இதனை  The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மேலும்  www.tnteu.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண் ணப்பிக்க வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Registrar i/c, Tamil Nadu Teachers Education University, Chennai - 97
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2018

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner