பள்ளி - கல்லூரிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டிணகிரி, செப். 12 கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 8.9.2018 அன்று கிருட்டிணகிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

கடவுள் மறுப்பு மாணவர் நிலவன் கூறியதும் முதலாவதாக மேனாள் தமிழக முதலமைச்சர் மானமிகு சுயமரியாதைக்காரர், முத்தமிழ் அறி ஞர் கலைஞர் அவர்களுக்கும், சென்னை பெரி யார் திடல் சாக்லேட் தாத்தா அய்யா ஜெயகுரு நாதன் அவர்களுக்கும், திராவிடன் நிதி நிறுவன தலைவர் நடராஜன் துணைவியார் குஞ்சிதம் அம்மா அவர்களுக்கும், திருப்பத்தூர் மாவட்ட இணைச் செயலாளர் அரங்கரவி தாயார் ஆகியோர் மறைவிற்கும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மாணவர் கழக செயலாளர் அஜித்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தின் தலைவர் க.கா.வெற்றி கூட்டத்தின் நோக்கம் குறித்தும் 26.8.2018 அன்று சென்னையில் நடந்த மாநில மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளையும், தீர்மானங்களையும் விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர் கழக மாணவர்கள், அஜித்குமார், சிந்துஜா, கலை பாரதி, நிலவன், கயல்விழி, தமிழ்மணி, கதிரவன், மணிமொழி ஆகியோர் கருத்துரைக்கு பின் திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பா.கண்மணி, மாவட்ட செய லாளர் க.மாணிக்கம், மாவட்ட ப.க. தலைவர் லூயிஸ்ராஜ் ஆகியோர் மாணவர் கழகம் செயல் பாடு குறித்து பேசினார். மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட தலைவர் பெ.மதிமணியன் ஆகியோர் மாவட்ட மாணவர் கழகம் செயல்பட வேண்டிய சூழல் குறித்து வழிகாட்டி உரையாற்றினார்கள்.

தீர்மானங்கள்

1) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்ற மாவட்ட திராவிட மாணவர் கழக கிருட்டிணகிரி அரசு கலைகல்லூரி தலைவர் ஆசிபா அவர் களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2) எதிர்வரும் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவை கிருட்டிணகிரி மாவட் டத்தில் உள்ள கல்லூரி பள்ளிகளில் பெரியார் படம் வைத்து கொண்டாடுவது எனவும்,

3) திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மாணவர்கள் மத்தியில் கழக கொள்கையை எடுத்து சென்று பிரச்சாரம் செய்வதெனவும்,

4) மாவட்ட மய்ய பகுதியில் மாணவர் கழகம் சார்பில் மாணவர்களை திரட்டி கருத்தரங் கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கிருட்டிணகிரி நகர செய லாளர் தங்கராசு, வடிவேல், நாகராஜ், காவேரிப் பட்டணம் ஒன்றிய செயலாளர் மனோகர், நாசர், ப.க. பொறுப்பாளர் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக கயல்விழி நன்றி கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner