அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை-சேலம் 8 வழிச்சாலைத்திட்டம்: நீதிமன்ற உத்தரவை மீறி நிலத்தை கையகப்படுத்துவதா?

 

சென்னை, செப். 12 சென்னை_சேலம் 8 வழிச்சாலை விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, நிலத்தை கையகப் படுத்தும் பணியை எப்படி தொடரலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகை யில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமைச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்தது. அதன் அடிப்படையில், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த பசுமை வழிச்சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங் களில் விவசாய நிலங்களை கையகப் படுத்துவதற்கான நில அளவைப் பணி களை தமிழக வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு நிலத்தை இழக்க உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் போராட் டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சாலை திட் டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் இந்த வழக் குகள் விசாரணையில் உள்ளது. வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ‘தற்போதைய திட் டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின்படி 5 மாவட்டங் களில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அரசு நடத்தவில்லை. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங் கியது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதி ரானது என்றும், நிலம் கையகப்படுத் துவதில் விதிகள் பின்பற்றப்படவில்லை’ என்றும் வாதிட்டனர்.

அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜ ராகி  வாதிடும்போது, சட்ட விதிகளுக்கு உட்பட்டே நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஒப்பு தல் பெறாமல் எந்த பணிகளையும் மேற் கொள்ள முடியாது என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, சாலை அமைக்கும் திட்டம் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது. நில அளவைப் பணிகள் மட்டுமே தொடரப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கு நேற்று (11.9.2018) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, அரசு பிளீடர் ராஜகோபாலனிடம் நில அளவை விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு பிளீடர், பெரும்பாலான இடங்களில் நில அளவைப் பணி முடிந்துவிட்டது என்று கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நில அளவைப் பணி நடந்து விட்டது என்று கூறிவிட்டு ஆர்ஜிதம் செய்யும் வகையில் நில உரிமையாளரின் நிலத்தை சப்-டிவிஷன் செய்துள்ளீர்கள். இதை ஏற்க முடியாது. நீதிமன்றம் நில உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலை யில், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணி யில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திட் டத்திற்கே தடை விதிக்க வேண்டிய நிலை நேரிடும் என்றனர்.

அதற்கு அரசு பிளீடர், இந்த அறிக்கை வரைவு அறிக்கைதான். ஆவணமாகக் கருதக்கூடாது என்றார். இதை நீதிபதி கள் ஏற்க மறுத்தனர். மேலும், ஒரு மரத்தை வெட்ட அனுமதி வழங்கி விட்டு 500க்கும் மேற்பட்ட 100 ஆண்டு கள் பழமையான  மரங்களை வெட்டி யுள்ளீர்கள். அதற்கு பதில் ஒரு மரமா வது நட்டுள்ளீர்களா? என்று கேட்டனர்.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் மோகன் ஆஜராகி, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது அந்த சாலை மிருக காட்சி சாலை, தேசிய பூங்கா, உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், வண்டலூர் உயிரி யல் பூங்காவிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சாலை அமைக்கப்படு கிறது. இதுவே விதிமீறல்தான் என்று வாதிட்டார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலனை பார்த்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அனுமதி எப்போது கிடைக்கும் என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அந்த ஆய்வு அறிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இதையடுத்து, நீதி பதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு எந்த நிலையில் உள்ளது என்று மத்திய அரசும், வருவாய்த்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசும் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு விசாரணையை  14.9.2018 தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner