செப்டம்பர் 21 இல் தஞ்சையில் பெரியார் பட ஊர்வலம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், செப். 12 7.9.2018 அன்று இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார். மாநகரச் செயலாளர் சு.முருகேசன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் ச.சந்துரு, ஒன்றியத் தலைவர் இரா.சேகர், ஒன்றிய செயலாளர் செ.ஏகாம்பரம், மண்டல இளைஞரணி செயலாளர் வெற்றிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன், தண்டாயுதபாணி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, யோகா மல்லிகா ராஜமாணிக்கம், ஒன்றிய இளைஞரணி செய லாளர் நா.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக புரவலர் ஜெயராமன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி, மண்டல செயலாளர் மு.அய்யனார், மண்டல தலைவர் வே.ஜெய ராமன் ஆகியோர் உரையை தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் விடுதலை சந்தா திரட்டுதல், பெரியார் பட ஊர்வலம் நடத்துதல் குறித்து சிறப்புரையாற்றினார். இறுதி யாக மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலை மையுரையாற்றினார். மாநகர இளைஞரணி தலைவர் மதன்ராஜ் நன்றி கூறினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம் மானமிகு சுயமரியாதைக்காரன் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரின் அளப்பரிய தொண்டிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் நடராசன் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: 20.8.2018 சென்னையில் நடை பெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன உரிமை மீட்பு ஏடான விடு தலையை பரப்பிடும் நோக்கிலும் தஞ்சாவூர் ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் பழைய சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந் தாக்களை சேர்த்தும் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: 8.9.2018 அன்று மாலை மன் னார்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் மற்றும் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் அனைத்து கழக தோழர்களும் பங் கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படு கிறது. தீர்மானம் 5: செப்டம்பர் 17 அன்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில் கழக தோழர்கள் இல்லங்கள் மற்றும் கிளை கழகங்கள் தோறும் கழகத்தின் லட்சிய கொடியை ஏற்றுவது, பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்குவது, புத்தாடை அணிவது, பெரியார் உருவச்சிலைகளுக்கு மற்றும் பெரியார் படங்களுக்கு மாலை அணிவிப்பது, ஒன்றியம், நகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தஞ்சை ஒன்றியத்தில், நகரத்தில்  வாய்ப்புள்ள இடங் களில் பொதுக்கூட்டங்களையும், தெருமுனைக் கூட்டங்களையும் பெருமளவில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு செப்டம்பர் 21 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் பெரியார் பட ஊர்வலத்தில் அனைத்து கழகத் தோழர்களும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப் படுகிறது.

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் செப். 19 அன்று தஞ்சாவூர் தமிழ்பல்கலை கழக திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தில் பெருந்திரளான மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner