எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை, ஜூலை 7 நாளை குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநில மாநாட்டிற்கு  இன்று குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு  பேண்ட் இசை முழங்க தோழர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

மாநில மாணவர் கழக மாநாட்டுக்கு சென்னையிலிருந்து இரயில் மூலம் குடந்தைக்கு இன்று (ஜூலை 7) காலை 5.30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு நாச் சியார் கோவில் ஏ.என். குமார் பேண்ட் இசை முழங்க, தோழர்கள்,  குடந்தை மாவட்டத் தலைவர் கு. கவுதமன் அவர்கள் தலைமையில் சிறப்பான எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்று சிறப்பு செய்த பெரு மக்கள்

குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட் டத் தலைவர் கு. கவுதமன், செயலா ளர் சு. துரைராசு, மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு. சண்முகம், செயலாளர் வி. மோகன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, மாநில மாணவர் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், துணைச் செயலாளர் ச. அஜிதன், மாநில அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன், மேனாள் மாவட்டத் தலைவர் வை. இளங்கோவன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க. குருசாமி, மேனாள் மாநகர தலைவர் தி. மில்லர், மாவட்ட இளைஞரணி செய லாளர் திராவிடன் கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர் கு. நிம்மதி, பெரு நகரத் தலைவர் வழக்குரைஞர் பீ. இரமேசு, செயலாளர் காமராசு, மாவட்ட மாணவர் கழக தலைவர் நாக. செந்தமிழன், செயலாளர் அ. அரவிந்த் வழக்குரைஞர் ம. திராவிட எழில் ஆகி யோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

கலந்து கொண்டோர்

வரவேற்பில் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, துணைச் செய லாளர் த. யாழ்திலீபன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா. மணியம்மை, தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் க. சந்துரு, மகளிரணி பொறுப்பாளர்கள் இராணி, திரிபுரசுந்தரி, அஞ்சுகம், குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், பெரியார் பெருந்தொண்டர் கபிஸ்தலம் கணே சன், எரவாஞ்சேரி மாஸ்டர் இராசா குடும்பத்தினர், குடந்தை அறிவழகன், நாச்சியார்கோவில் குணா, சங்கர் இரவிச் சந்திரன், தஞ்சை மாவட்ட மாணவர் கழக இணைச் செயலாளர் சற்குணன், துணைச் செயலாளர் ச. சிந்தனை அரசு, தஞ்சை கி. சவுந்தரராசன், க. சங்கர், க. வீரமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பின்னர், தமிழர் தலைவர் அவர் களை இரயில் நிலையத்திலிருந்து பேண்ட் இசை முழங்க வாகனத்தில் ஊர்வலமாக காமராசர் சாலை, தலைமை அஞ்சல் நிலையம் சாலை வழியாக இராயாஸ் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர். சாலையின் இரு புறமும் கழகக் கொடிகளும், சுவரொட்டிகளும், வளைவு விளம்பரங் களும், தமிழர் தலைவர் அவர்களை வரவேற்கும்விதமாக மாநாட்டு குழுவி னர் சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தனர். தமிழர் தலைவரின் வரவேற்பு ஊர்வலம் குடந்தை நகரில் அதிகாலையிலே பரபரப்பாக காணப்பட்டது. ஊர்வலம் பொது மக்கள் கண்டு வியக்குமளவு அமைந்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner