எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

வல்லம், ஜூலை 07 தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில், பெரியார் சிந்தனையை சிறப்புப் பாடமாகக் கொண்டு பகுதிநேர பட்டயப் படிப்பு கடந்த கல்வியாண்டு முதல் தொடங்கப் பட்டு, இக்கல்வி ஆண்டின் (2018-2019) சேர்க்கை நடைபெறுகிறது. இதன் படிப்புக் கால அளவு ஓராண் டாகும். வார இறுதி நாட்களில் வகுப்புகள் துறைசார்ந்த பேராசிரியார்களால் நடத்தப்படும், இப்படிப்பிற்கான கல்வித்தகுதி குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு தடையில்லை. இதற்காக குறைந்த கல்விக் கட்டணமே வசூலிக்கப் படுகிறது. பயிற்சி மற்றும் கல்விக் கட்டணம் ஆண்டிற்கு ரூ.3,000/- (மூவாயிரம்) மட்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனை யாளரும், மிகப்பெரிய சீர்திருத்தவாதியுமான அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்வும் - பணியும் - தத்துவமும் - சிந்தனையையும் பெரியாரியல் பாடமாக கல்லூரி அளவில் நன்கு கற்றறிந்து, தேர்வு எழுதி அதில் புலமை பெற்றதற்கான பட்டயச் சான் றிதழினையும் பெற்றிட இது அருமையான வாய்ப்பாகும். இருபத்தோராம் நூற்றாண்டு பெரியாரின் பகுத்தறிவு நூற்றாண்டை நோக்கும் இன்றைய இருபால் இளை ஞர்கள் முதல் பலதுறைகளில் பணியாற்றும் பல நிலை பணியாளர்கள் வரை அனைவரும் கற்க வேண்டிய பாடம் பெரியாரியல் பாடமாகும். அத்துடன் பெரியார் பற்றாளர்களும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களும் மேலும் பெரியார் சிந்தனைகள் குறித்து கூர்தீட்டிக்கொள்வதற்கும், தத்தம் வாழ்வியல் நெறிக்கு பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகனை பயன் படுத்திடவும், இப்பட்டயப் பயிற்சியில் சேர்வது இன்றி யமையாததாகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையத்தளத்தில் (ஷ்ஷ்ஷ்.ஜீனீu.மீபீu) வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, அத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- வங்கியில் செலுத்தி பல்கலைக்கழக முகவரிக்கு எதிர் வரும் ஜூலை 16-க்குள் அனுப்பிடவும். மேலும் ஜூலை -02 முதல் பல்கலைக்கழகத்தில் நேரடிச் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. தகுதியானவர்களை தேர்வு செய்து, பயிற்று வித்து, அங்கீகரித்து பல்கலைக்கழகம் பட்டயச்சான்று அளிக்கும். வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள் ளவும்.

இவ்வாறு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைகழக செய்திக் குறிப்பில் பதிவாளர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

- பதிவாளர் அறிவிப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner