எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

றீகவிஞர் கலி. பூங்குன்றன்

குடந்தையில் ஒரு

பானை

தன்னை உயர்ஜாதி என்றது.

"என்னைத் தீண்டாதே!"

என்றது.

ஆம், அந்தப் பானை

"பிராமணப்"

பானையாம்

அதற்குள் இருந்ததோ

"ஜலமாம்!"

'தாகமா சூத்திரனே?

அதோ ஒரு

தனித்

தண்ணீர்ப் பானை'

கைகாட்டியது

ஆரியம்.

ஆம் ஜலம்

ஆரியம்

தண்ணீர்

திராவிடம்!

'தாகத்திலும் ஜாதியா?'

தந்தை பெரியாரின்

தாடி நெருப்பு

கேட்டது - சுட்டது

தன்மானக் கைத்தடி

வந்தது  கையில்

நொறுங்கியது பானை

பிறந்தது ஒரு

சேனை

அதுதான்

திராவிட

மாணவர் கழகம்!

பானை - ஆம்

அது ஒரு

குறியீடு!

ஆரியத்தின்

ஆணவச் சிரிப்பு.

அடி கொடுத்ததோ

திராவிடம்

ஆம்

அது

திராவிடத்தின்

விழிப்பு!

அதே குடந்தையில்

அதன்

பவள விழா-

பரிணாம வளர்ச்சி!

கொட்டுவோம்

முரசம்!

கொள்கைப்

பாட்டையிலோ

புதுப்பாய்ச்சலின்

அம்சம்!

கொடியோடு வருகவே

கொடியோர் செயல்

ஒழிகவே!

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner