எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பனாஜி, ஜூலை 11 விவசாயிகள் வயல்வெளியில் நின்றபடி, தினமும் அரைமணி நேரம், வேத மந்திரங்களை உச்சாடனம் செய்தால் போதும், விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கோவா மாநில விவசாயத் துறைஅமைச்சர் விஜய் சர்தே சாய்கூறியுள்ளார். இது விவசாயி கள் மத்தியில் சிரிப்பை ஏற் படுத்தியுள்ளது.

கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணி கட்சியான, கோவா முற்போக்கு கட்சியின் விஜய் சர்தேசாய், விவசாயத் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், கோவாவி லுள்ள, சிவயோகா பவுண்டே ஷன் என்ற அமைப்பு, தனது அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி வைக்குமாறு, அமைச்சர் விஜய் சர்தேசாயை அழைத்துள்ளது. அவரும் வயலுக்கே சென்று இந்த விவசாய முறையைத் துவக்கி வைத்துள்ளார்.

அப்போது, அண்டவெளி விவசாயம் என்றால் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அமைச் சர், ‘‘விவசாயிகள் தங்கள் வயல் வெளியில் நின்று, 30 நிமிடங்கள், வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யவேண்டும்; அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால், நெற்பயிர்கள் அமோக விளைச் சல் கொடுக்கும்; இதுதான் அண்டவெளி விவசாயம்’’ என்று தானொரு அமைச்சர் என்பதையும் மறந்துவிட்டு மூடத்தனமாகப் பேசியுள்ளார்.

அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்கள் பாது காப்பானவை; அவை, ரசா யன உரங்கள் கலக்காமல், நச் சுத்தன்மை அற்றதாக இருக்கும் என்றும் விவரித்து இருக்கும் அவர், இதற்கு, சிவயோக விவசாயம் என்றும், மற்றொரு பெயரும் இருப்பதாகவும், இந்த சிவயோக விவசாயம்தான், எதிர்காலத்தில் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்று சீரியஸாக உள றியுள்ளார். கோவா அமைச் சரின் இந்த பேச்சுக்கள் அடங் கிய வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி, கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner