எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, ஜூலை 13 -உன்னாவ் கும்பல் வல்லுறவு வழக்கில், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், சிபிஅய் காவல் துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர், தன்னிடம் வேலைவாய்ப்புகேட்டு வந்த, மைனர் பெண்ணை, தனது சகோதரர்களுடன்கும்ப லாகச்சேர்ந்து பாலியல்வல் லுறவுக் கொடுமைக்கு உள் ளாக்கினர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் முறை யிட்டும் நடவடிக்கை எடுக்கப் படாததால்,எம்.எல்.ஏ.மீது வழக்குப் பதிவு செய்ய வேண் டும் என்று பாதிக் கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் முதல்வர் ஆதித்யநாத் வீட்டு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்பிறகும் நடவடிக்கை இல்லை. மாறாக, பாதிக்கப் பட்டபெண்ணின் தந்தையை, எம்எல்ஏ-வின் கூட்டாளிகள் அடித்துக் கொன்றனர். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து இப்பிரச்சினையில் தலையிட்டதைத் தொடர்ந்து, குல்தீப் சிங் செங்கார் உள்ளிட் டோர் தற்போது சிபிஅய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, லக்னோ சிறை யில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உன்னாவ் வன்கொடுமை தொடர்பாக சிபிஅய் காவல்துறையினர் புத னன்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை சட்டப்பிரிவு 363, 366, 376 மற்றும் 506 ஆகியவற்றின்கீழ் குற்றவாளி என்று சிபிஅய் காவல்துறையினர் அறிவித்துள் ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner