எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 13 சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம் பெற வேண்டி எம்.எஸ்.கோல்வால்கர் நேருவை தொடர்ந்து புகழ்ந்துதள்ளிய வரலாற்றை பேராசிரியர்  ராமச்சந்திரகுகா தனது நூலில், ஆர்.எஸ்.எஸ். இதழில் இருந்த பல உண்மைத்தரவுகளுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

‘‘பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நேருவையும், காங்கிரசையும் கடு மை யாக விமர்சித்துக்கொண்டே உள்ள னர். இந்தியாவை நாசமாக்கியதன் அடித்தளமே நேருவில் இருந்துதான் தொடங்கியது என்று கூறி வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு ‘த ஆர்கனைசர்' நேரு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தர வில்லை, அவர் தேசத்துரோகி என்ற தொனியில் எழுதி அவர்மீது வன்மம் காட்டியிருந்தது. ஆனால் 1950-களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களில் ஒரு வருக்கு நேரு, அமைச்சர் பதவியைத் தருவார் என்ற பேராசையில் அவரைத் தொடர்ந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தது.''

இத்தகைய வரலாற்று உண்மை நிகழ் வுகள் உடைய தனது நூல் குறித்து ஆங்கில நாளிதழான ‘இந்துஸ்தான் டைம்ஸ்' என்ற இதழில் சிறப்புக்கட்டுரை ஒன்றை எழுதிய பிரபல வரலாற்று ஆசிரியர்  ராமச்சந்திர குகா எழுதியுள்ளதின் தமி ழாக்கம் வருமாறு:

1949 ஆகஸ்ட் 30ஆம் தேதி,  காந்தி கொலைக்காக அந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டதடைநீக்கப்பட்டுசில நாட்களுக்குப் பிறகு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அன்றைய தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் ஜவகர்லால் நேருவை சந்தித்துப் பேசினார். ஆர்எஸ் எசின் இதழான ஆர்கனைசர், பாரதத்தின் எதிர்காலத்திற்கான நற்சகுனமாக இரண்டு மேதைகளின் சந்திப்பு என்று இந்த நிகழ்வை தலைப்பிட்டு எழுதி யிருந்தது.

அதனை அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும், நேருவும் கோல்வால்கரும் சந்தித்தனர். இச்சந்திப்பு குறித்து அந்த இதழ் எழுதியதாவது: குருஜியின் பார தப் பிரதமர் நேருவுடனான சந்திப்பு மனம்விட்டுப் புரிந்துகொள்ளும் வகை யில் உள்ளது என்றும், வேறு எந்த அமைப்பும் நேருவிடம் இவ்வளவு மனம்விட்டுப் பேசியதில்லை என்றும் எழுதியிருந்தது.

நேரு, கோல்வால்கரை அவ்வப்போது சந்தித்தாலும் தானும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தார். ஆனால், காங்கிரசிற்குள் இருந்த பார்ப்பனப் பழைமைவாதிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நட்புணர்வுடன் இருப் பதை விரும்பினர். 1949 அக்டோபரில் நேரு அமெரிக்க சுற்றுப்பயணம் சென் றிருந்தபோது, காங்கிரசுக்காரர்கள் ஆர்.எஸ்.எசில் சேர்வதை அனுமதிப் போம் என சில காங்கிரசு தலைவர்கள் அறிவித்தனர்.  நேருவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவர் பல பிரம் மாண்ட கூட்டங்களில், ஊர்வலங் களில்பங்கேற்றார்.பல்கலைக்கழகங் கள்டாக்டர்பட்டங்களைவழங்கின. ஒவ்வொருஇந்தியனும் பெருமைப்படு கிறான் என்று எழுதியது ‘ஆர்கனைசர்' (நவம்பர் 16, 1949).  அமெரிக்காவிலிருந்து திரும்பியநேரு,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்களை காங்கிரசிலும், காங்கிரசுக்காரர்களை ஆர்.எஸ்.எசிலும் அனுமதிக்கும் திட்டம் குறித்து அறிந்து அதைத் தடுத்தார்.  மற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காங்கிரசில் இருக்க முடியாது என்றார். இதனைக் கடுமையாக விமர்சித்தது ஆர்கனைசர். நேருவின் இந்த மாற்றமானது இசுலாமிய ஆதரவுச் செயல்பாடு என்றது.

துவக்கத்தில்ஆர்.எஸ்.எஸ்.நேரு வைப்புகழ்ந்து தள்ளியதற்கு காரணம் இருந்திருக்கிறது. அதாவது ஆர்.எஸ்.எசின்குருஜிகோல்வால்கர்,நேருவுக் கும் குருஜியாக இருக்க விரும்பியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் காங்கிரசில் இணைந்து தேசத்தின் முன்னுரிமை என்ன என்பதை வடி வமைப்பதில் பங்கேற்க வேண்டுமென விரும்பியிருக்கிறார்.

ஆனால், எல்லோருக்கும் வாக்கு ரிமை, பெண்கள், தலித்துகள், சிறு பான்மையினருக்கு சம உரிமை, நவீன அறிவியலை நோக்கிய பயணம் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கும் என்பது நேருவுக்கு தெரியும். தவிர, இந்தமதிப்பீடுகளைஉள்ளடக்கி அரசி யல் சாசனத்தை வடிவமைத்த சட்ட அமைச்சர் பி.ஆர். அம்பேத்கரை வெளிப் படையாகவே வெறுத்தது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உள்ளே விட்டால், அது ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும் என்று உணர்ந்திருந்தார் நேரு. அதனால், அந்த அமைப்பின் புகழ்ச்சிக்கெல்லாம் நேரு மயங்கவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பாக நேரு ஆர்.எஸ்.எஸ்-அய் புறக்கணிக்க முடி வெடுத்திருக்காவிட்டால், இந்தியக் குடியரசு துவக்கத்திலேயே துருப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் என்கிறார் ராமச்சந்திர குகா.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner