எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காமராசர் யார்?

இன்று காமராசர் பிறந்த நாள் (1903). 72 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து அயரா உழைப்பால் இந்திய அரசியல் வானின் ஏணியை எட்டியவர்.

காமராசர் என்றும், பச்சைத் தமிழர் என்றும் இரட்சகர் என் றும் தந்தை பெரியார் அவர் களால் பட்டி தொட்டியெல்லாம் பரப்புரை செய்யப்பட்டவர்.

காங்கிரசை எதிர்த்த தந்தை பெரியார் காமராசரை ஏன் ஆத ரித்தார்? இன்றைய இளைய உலகு இதனைத் தெரிந்து கொள் வது அவசியம்.

காங்கிரசுக்குள்ளேயே ஆச் சாரியாருக்கு (ராஜாஜி) எதிரணி யில் இருந்தவர் காமராசர். தன்சம்பந்தி காந்தியார் மூலம் காமராசர் மட்டம் தட்டப்பட்டது உண்டு. (ராஜாஜியின் எதிர் அணியிலிருந்த காமராசரை சிறீவீஹீuமீ என்ற சொல்லாடலால் காந்தியார் விமர்சித்தார் - 'அரிஜன்' இதழில்).

குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்விக் கண்ணைக் குத்திய காரணத்தால் தமிழ்நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்த காரணத்தால் பதவியை விட்டு ராஜாஜி விலகி ஓடும் நிலை உருவானது.

அந்த நிலையில் அடுத்த முதல் அமைச்சர் யார்? என்ற வினா எழுந்த நேரத்தில் காம ராசர் பெயர் அடிப்பட்டாலும், அதனை ஏற்க அவர் தயாராக இல்லை பல்வேறு காரணங் களால்.

அந்த சூழ்நிலையில் சென்னை அரசினர் தோட்டத் தில் (இன்றைய ஓமாந்தூரார்த் தோட்டம்) இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடு வீட்டில் ஒரு சந்திப்பு முக்கியமானது. தந்தை பெரியார், காமராசர், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகி யோரின் சந்திப்பு அது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி காமராசர் தவிர்த் தார் என்றாலும் "எந்த எதிர்ப் பையும் சமாளிக்க நாங்கள் இருக்கிறோம்; நீங்கள் இந்த நேரத்தில் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள்" என்றார் தந்தை பெரியார், காமராசரும் ஏற்றுக் கொண்டார்.

அவரை எதிர்த்து ராஜாஜி யின் சீடர் சி. சுப்பிரமணியம் நிற்க வைக்கப்பட்டு தோல்வியைச் சந்தித்தார் சி.சு. (காமராசுக்குக் கிடைத்த வாக்குகள் 93 - சி.வுக்குக் கிடைத்தது 41).

ஆச்சாரியாரின் குலக் கல்வியை ஒழிக்க பள்ளிகளை பட்டி தொட்டியெல்லாம் திறந் தார் காமராசர்.

அவ்வளவுதான்... "கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை" என்றனர்.

குயில் முட்டையிட்டு வந்த வுடன் அதனைக் காகம் அடை காக்கும். அதேபோல தந்தை பெரியாரைக் குயிலாகவும், காம ராசரைக் காகமாகவும் கார்ட்டூன் போட்டது 'கல்கி' (பெரியார் கொள்கையைத்தான் காமராசர் பின்பற்றுகிறார் என்பது இதன் பொருள்).

17.9.1967 அன்று திருச்சியில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த காமராசர் தந்தை பெரியாரின் தொண்டைப் புகழ்ந் தார். அவ்வளவுதான்,  'மெயில்' ஏடு எப்படி கார்ட்டூன் போட்டது தெரியுமா? பெரியார் சுதந்திரத் தமிழ்நாடு கோருகிறார். அதற்கு ஒத்து ஊதுகிறார் காமராசர் என்ற கார்ட்டூன் போட்டது 'மெயில்' ஏடு.

இவை எல்லாம் இளைய தலைமுறைக்குத் தெரியுமா?

- மயிலாடன்

(கார்ட்டூன்களை தனியே  காண்க).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner