எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குயில் முட்டையிட்டு வந்தவுடன் காகம் அடைகாத்து குஞ்சு பொரிக்கும் என்பது போல காங்கிரஸ் இருக்கிறது என்று 1957இல் 'கல்கி' வெயிட்ட கார்ட்டூன் இது. பெரியாரைக் குயிலாகவும், காமராசரைக் காகமாகவும் சித்தரித்துள்ளது 'கல்கி' இதழ்.

17.9.1967இல் திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.காமராசர், தமிழக முதல்வர் அண்ணாதுரை ஆகியவர்கள் கலந்துகொண்டு பெரியார் பெருந்தொண்டினைப் பாராட்டியதைக் கண்டு சகிக்காத பார்ப்பன ஏடான 'மெயில்' பெரியாரது சுதந்திரத் தமிழ் நாடு கோரிக்கைக்கு ஒருவர் ஒத்து ஊதுகிறார்; மற்றவர் தாளம் தட்டுகிறார் என்பதாக சித்தரித்துக்காட்டி, தனது ஆத்திரத்தைக்

கொட்டியிருக்கிறது! “தமது மனதிற்பட்டதை துணிவுடன் கூறி நல்ல லட்சியங்களுக்காகப் பாடுபடுகிறவர் பெரியார்" என்று காமராசர் பாராட்டியதை திசை திருப்பும் வண்ணம் 'மெயில்' கேலிச்சித்திரம் தீட்டியுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner