எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 22  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்   ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

சானிடரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக் கப்பட்டுள்ளது. சானிடரி நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று  திராவிடர் கழகம் உட்பட பல்வேறு சமூக நல அமைப் பினர் கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்தக் கோரிக் கைக்குப் பலன் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப் பட்டது. அதி லிருந்து, பல்வேறு தரப்பினரின் கோரிக் கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலை மையில் டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் அன் றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய் யப்பட்டது.

கழக மகளிரணி மாநாடுகளில் சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு தேவை என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner