எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘பாரதப்' பண்பாடு

சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னை வந்த ஜூனியர் ஸ்குவாஷ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அம்ரே அலின்சக் போட்டியில் பங்கேற்கவில்லை. ‘‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை'' என்று கூறியுள்ளார் என்ற தகவலுக்காக இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் ஒரே ஒரு தடவையாவது தலைகுனிந்து நிற்கவேண்டும்.

ஆன்மிகத் தேடலில் ருசியாவிலி ருந்துதிருவண்ணாமலைவந்தி ருந்த 21 வயதுப் பெண் கோவில் வளாகத்துக்குள்ளேயேஅவர்தங் கியிருந்தஅறையில்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டார் (16.7.2018).

விடுதி உரிமையாளர் பாரதி என்பவர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்மிகம் தேட வந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கு இத்தகு அவலம் - ஆண்டவன் அருணாசலேசுவரர் தன்னைத் தேடி வந்த ஒரு பெண் ணைக் காக்கவில்லை என்பதுபற்றி யாராவது வாயைத் திறக்கிறார்களா?

2017 டிசம்பர் 17 அன்று ஒரு வன்புணர்வு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடந்தது!

இமாசலப் பிரதேசத்தில் மணா லியில் தங்கியிருந்தவர் கடந்த  மே 30 ஆம் தேதி மாலை குலு பகுதிக்கு ஒரு வாடகைக் கார்மூலம் சென்றபோது அந்த ஓட்டுநரும், சிலரும் சேர்ந்துகொண்டு அந்தப் பெண்ணைச் சீரழித்தனர்.

2017 அக்டோபர் 7 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பதேபூர் சிக்ரியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் துணைவரோடு வந்திருந்தார். ஒரு காலிக் கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி, அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்தனர்.

5.12.2015 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயது நிறைந்த இசைத் துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமையில் ஈடு பட்டனர்.

இன்னொரு வரலாற்றுத் தக வலும் உண்டு.

‘‘டில்லியிலிருந்துகல்கத்தா வுக்கு அவுரங்க சீப் படை பரி வாரங்களுடனும், அரசிகளுடனும் செல்லும் வழியில் காசியை வந் தடைந்தார். அரசிகள் அனைவரும் காசியில் நீராடி விசுவநாதரைத் தரிசிக்க விருப்பம் தெரிவித்ததால் அவுரங்க சீப் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி நீராடிவிட்டு திரும்பும் வழியில் கட்ச் மகாராணியை திடீ ரென்று காணவில்லை. நீண்ட நேரத் தேடலுக்குப்பின் விசுவநாதர் கோவில் கருவறையில் உள்ள விக்கிரகத்தின் அருகிலேயே கட்ச் ராணியை அந்தக் கோவில் தலைமைப் பூசாரி வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

மொத்தப் படையும் அனலாய்த் தகித்தது.

கோவில் தீட்டுப் பட்டுவிட்டதால் விக்கிரகத்தை அப்புறப்படுத்தி, புதியது வைக்கும்படி உத்தரவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் அவு ரங்கசீப்.''

- பட்டாபிராசய்யா  எழுதிய ‘‘சிறகுகளும் ஒரு கல்லும்'' என்ற நூலிலிருந்து...

பாரத மாதாவின் பத்தரை மாற்றுப் பண்பாட்டுத்தனம் இதுதான் போலும்!

இந்து மத சமாச்சாரங்களில் கடவுள்களேசிற்றின்பப்பிரியர் களாகத்தானே சித்தரிக்கப்பட்டுள்ள னர்.

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner