எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

தமிழ்நாடு அரசு - வீட்டு உரிமையாளர்களின் வரி உயர்வு 100 சதவிகிதம் உயர்த்தியுள்ளது, நடுத்தர வர்க்கத்தினராக உள்ள மக்களுக்கு மிகப்பெரிய துன்பத்தைத் தருவதாகும்!

விலைவாசி எல்லாம் உயர்ந்துகொண்டே போகும் நிலை; கட்டுப்படுத்த முடியாமல் பணவீக்கம் (மிஸீயீறீணீtவீஷீஸீ) அதிகமாகி வருகிறது.

கடந்த  பல ஆண்டுகளாக வீட்டு வரி உயர்த்தப்படவில்லை என்பது தக்க சமாதானம் ஆக முடியாது.

‘‘கடிதோச்சி மெல்ல எறிக''  என்ற வள்ளுவர் கருத்திற்கேற்ப, மக்களின் வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி - இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த கூடுதல் வரி விதிப்பை விதித்திருக்கவேண்டும். ஒரே அடியாக எடுத்த எடுப்பிலேயே 100 சதவிகித கூடுதல் வரி என்பது நியாய அடிப்படையிலும், இயற்கை நீதி அடிப்படையிலும் ஏற்க இயலாத ஒன்று.

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போட்டதன் விளைவாக, மத்திய அரசு, மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதிப் பங்கீட்டை தர மறுத்துள்ளதை, இப்படி ஒரு வழியின்மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்த்துவிடலாம் என்று யோசனை சொன்னவர்களும் தவறான பாதையில் அரசினை வழி நடத்துபவர்கள் ஆவார்கள்!

ஏற்கெனவே அதிகப்பற்று ‘‘ஓவர் டிராப்ட்'' மாநிலக் கணக்கில் உள்ளதை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய தொகையை வாதாடியோ, போராடியோ தமிழ்நாடு அரசு பெற்றால் இந்த முறைக்கு இறங்கியிருக்கவேண்டியதில்லை.

எனவே, சொத்து வரி உயர்வை குறைக்க மறுபரிசீலனை செய்வது அவசர அவசியமாகும்!

கி.வீரமணி

சென்னை       தலைவர்

25.7.2018        திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner