எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 25 தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்கு, ‘எவ்வளவு செய்தாலும் நாங்கள் மோடி ஆட்சியின் பின்னால்தான் போவோம்'' என்று அ.தி.மு.க. ஓட்டுப் போட்டதல்லவா - அதற்குக் கிடைத்த பரிசுதான் இது என்று கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில் காங்கிரசு கட்சி இலக்கிய அணியின் சார்பில் பெருந்தலைவர் காமராசர் 116 ஆம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியா ளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்: தமிழக துணை முதல மைச்சர் ஓ.பி.எஸ். அவர்களை டில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்துவிட்டாரே?

தமிழர் தலைவர்: அவர்கள் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு எம்.பி. அவருக்குக் கொடுக் கக்கூடிய மரியாதையை துணை முதல்வருக்கு அவர்கள் கொடுக்கத் தயாராக இல்லை என்று சொல்லும்போது, எவ்வளவு செய்தாலும், மீண்டும் நாங்கள் மோடி ஆட்சிக்குப் பின்னாலே போவோம் என்று ஓட்டுப்போட்டார்கள் அல்லவா? அதற்கு நல்ல பரிசு.

அவர்களுடைய

கட்சி ஆசை

செய்தியாளர்: தமிழினத்துக்கு அம்மா பிரதமர் மோடிதான் என்று  தமிழிசை சொல் வது...?

தமிழர் தலைவர்: அவர்களுடைய கட்சி ஆசையைச் சொல்கிறார்கள். பல பேருக்கு இன்னும் இமயமலை ஏறவேண்டும் என்றுகூட ஆசை இருக்கிறது. அதுபோன்றதுதான் இந்த ஆசை.

செய்தியாளர்: நூறு சதவிகித வீட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருக்கிறதே?

தமிழர் தலைவர்: அது பொதுமக்கள்மீது திணிக்கின்ற மிகப்பெரியதொரு தவறான போக்கு.  நூறு சதவிகித வரியை இத்தனை ஆண்டுக்காலம் செய்யவில்லை என்று சொல் லுவது மட்டுமல்ல, இந்த வரியைப் போட்டதன் காரணமே, இவர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்பதற்காக, அவர்கள், மத்திய அரசு நிதியை வழங்கவில்லை. எனவே, நிதிப் பற்றாக்குறை என்று சொல்லும்போது, மத்திய அரசிடம் தட்டிக்கேட்டு அந்த உறுதியை இவர்கள் வாங்காமல், அந்த உரிமையை விட் டுக்கொடுத்துவிட்டு, அதை பொதுமக்கள் தலை யிலே       சுமத்துவது என்பது விரும்பத்தக்க தல்ல. இதிலே மறு பரிசீலனை தேவை.

- இவ்வாறு தமிழர் தலைவர் குறிப்பிட்

டார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner