எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காந்திநகர், ஜூலை 25 குஜராத் மாநிலத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக, லாரி ஓட் டுநர்கள் பக்கோடா தயாரித்து விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லாரி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து நடத்தி வரு கிறார்கள்.

அதனால், லாரி ஓட்டுநர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனை வெளிப்படுத்தும் வகையில், மோடியின் குஜராத் மாநிலத்திலேயே பகோடா விற்கும் போராட்டத்தை நடத்தி யுள்ளார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண் டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். மூன்றாம் நபருக்கான காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி, லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் மட்டும் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் அத்தி யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள் தங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேலைவாய்ப்பற்றவர்கள் பகோடா விற்றுப்பிழைக்கலாம் என்று கூறிய பிரதமர் மோடியைக் கண்டித்து அவர் மாநிலத்திலேயே பகோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டத்தை நடத் தியுள்ளனர்.

படித்தபட்டதாரிகள், வேலை வாய்ப் பற்ற இளைஞர்கள் பகோடா விற்றுப் பிழைக்கலாம் என்று மோடியின் கருத் துக்கு எதிராக டில்லி ஜேஎன்யு மாண வர்கள் பகோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டத்தை நடத்தியதற்காக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத் தால் தண்டத் தொகை விதிக்கப்பட்டது.

லாரி ஓட்டுநர்களுக்கு என்ன தண்டனை மோடியாட்சியில் விதிக்கப்பட உள்ளதோ தெரியவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner