எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சசி தரூர் எம்.பி., தகவல்புதுடில்லி, ஜூலை 25 ரக்பர் கான் படுகொலை தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலை யில், முசுலிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பது தான் பாதுகாப்பு என்று காங்கிரசு எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.

உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன் முறைகள் பல இடங்களில் குறைந்து விட்டதாகக் கூறுகிறார் கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார்அருகே ஒரு முசுலிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால், பாஜக-வினரோ அப்பாவிகளை அடித் துக் கொல்லும் நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகக் கூறுகி றார்கள். 2014-ஆம் ஆண்டு தேர் தலில் பாஜக வெற்றி பெற்றபின், இந்து வெற்றி களிப்பு அலை நாட்டையே துடைத்தெடுத்து விட்டது.

2014-இல் இருந்து இதுவரை சிறுபான்மையினருக்கு எதி ரான தாக்குதல்களில் 389 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அண்மையில், கால்நடைகளை ஏற்றிச் சென்ற டிரக் மீது சவாரிசெய்ததற்காக காஷ்மீரில் 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இதை யெல்லாம் பார்க்கும்போது, ஒரு முசுலிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பது தான் பாதுகாப்பாக தெரிகிறது என்று ட்விட்டரில் சசி தரூர் பதிவிட்டுள்ளார்.

மாட்டுக்கறி உண்பதை நிறுத்தினால் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிற்குமாம்!

ஆணவத்துடன் கூறுகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்

ராஞ்சி,ஜூலை25-மக்கள் மாட்டிறைச்சிசாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக் கொல் லப்படும் சம்பவங்களும் நின் றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் கூறியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே பசுமாடுகளை ஏற்றிச் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்களை, பசு குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினர். இதில் ரக்பர்கான் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பசு குண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளை தாக்கக் கூடாது என்றும், இதுதொடர் பாக கடுமையான தண்ட னைகளை விதிக்கும் வகை யில்,நாடாளுமன்றம்தனிச் சட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அண் மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ரக்பர் கான் அடித்துக் கொல் லப்பட்ட சம்பவம் நடந்ததால், ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மீது, தற்போதுநீதிமன்ற அவமதிப்புவழக்கும் தொட ரப்பட்டுள்ளது.இதனி டையே, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை நாடாளு மன்றத் தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மாடாக இருப்பதில் இருக்கும் பாதுகாப்பு,மனிதராகஇருப் பதற்கு இல்லையா? என்று தலைவர்கள் பலரும் கேள்விக் கணைகளை தொடுத்து வரு கின்றனர்.

பசுப்

பாதுகாவலர்களால்...

இந்நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பேசியுள்ளஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ்குமார், நாட்டில் பசுப் பாதுகாவலர் களால்,பசுமாடுகளைக்கடத் திச் செல்பவர்கள் தாக்கப் படுகிறார்கள் என்று குற்றச் சாட்டு வருகிறது; மக்கள் பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது? என்ற அதிர்ச்சிகரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், அடித்துக் கொல்லும் குற்றம், உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் அவர் மிகுந்த ஆணவத்துடன் கூறி யுள்ளார். இந்திரேஷ் குமாரின் இந்தப் பேச்சு மீண்டும் சர்ச் சையைக் கிளப்பியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner