எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உடல் நலம் குறித்து வீணான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் என்பது மானமிகு கலைஞர் அவர்களை சுற்றியே நடந்து வந்துள்ளது. உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள இந்த நிலையிலும், இன்று வரை அதுதான் உண்மையான நிலை.

தேர்தல் களத்தில் கலைஞர் அவர்கள் எப்படி தோற்றது கிடையாதோ அதே போல நோயை எதிர்த்து போராடும் களத்திலும் வென்று இல்லம் திரும்புவார்.

நோயிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் தன் பணிகளைத் தொடர்வார். இன்று (ஜூலை 28) இரவு 8.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. (பலத்த கரஒலி!) அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த மாநாட்டின் முதல் தீர்மானமாக நமது கலைஞர் அவர்கள் முழு உடல் நலம் பெற்று, தன் பணிகளைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

"திராவிடம் வாழ - அதன் தத்துவம் மலர்ந்து விரிய கலைஞர் தேவைப்படுகிறார். திராவிட இயக்கச் சித்தாந்தம்தான் நம்மை - நாட்டை வாழ வைக்கும்"

- மத்தூர் மாநாட்டில் தமிழர் தலைவர், 28.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner