எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 29 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இந்நிலையில் இன்று (29.7.2018) முற்பகல் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை எம்.பி.க்கள்,  கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், சிவா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. இராசா மற்றும் முரசொலி செல்வம், ஆகியோரிடம் கலைஞரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

செய்தியாளர்களுக்கு கழகத் தலைவர் அளித்த பேட்டி வருமாறு:

"சிறப்பான மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து தொடர்ந்து அவர்கள் அளிக்கின்ற சிகிச்சைகள் நல்ல பலனை கொடுக்கின்றன. எதிர்பார்த்ததற்கு மேலாகவே தலைவரது உடல் நலம் தேறி வருகிறது. தலைவர் இன்னும் ஓரிரு நாளில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறோம். வாழ் நாள் முழுவதும் போராடிய தலைவர் நம்முடைய கலைஞர் அவர்கள். அப்போது போராடியது மட்டுமல்ல; நோயோடு இப்போதும் போராடுகிறார்! அவர் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதுபோலவே இப்போதும் வெற்றி பெற்று வீடு திரும்புவார்."

கழகத் துணைத் தலைவர் கவிஞர்

கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner