எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஆக.3 கேரள மாநிலம் திருச்சூர் ராமவர்மபுரத்தில் போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடித்த காவல்துறையினருக்கு வழி அனுப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். அப்போது பயிற்சி முடித்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார்.

பினராயி விஜயன் சென்ற ஜீப்பை அந்தப் பயிற்சி பள்ளியின் பெண் காவலரான சசீந்திரா என்பவர் ஓட்டிச் சென்றார். இதன் மூலம் காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் ஜீப்பை ஓட்டிய முதல் பெண் காவலர் என்ற சிறப்பை சசீந்திரா பெற்றார்.

இந்நாள்...இந்நாள்...

1975 - என்.வி.நடராசன் மறைவு

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner