எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரூ, ஆக.3 கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா இண்டலக்சுவல், கருத்துச்சுதந்திரம், பகுத்தறிவு என்ற பெயரில் இந்துக்கள் குறித்துபேசுபவர்கள்யாராக இருந்தாலும் அவர்களை சுட் டுக்கொலை செய்யவேண்டும் என்று  கூறியுள்ளார்.

கருநாடகத்தைச் சேர்ந்த பசனகவுடா, இவர் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  தற்போது கருநாடக விஜய்புரா தொகுதி சட்டமன்ற உறுப்பி னராகஉள்ளார்.இவர்சட்ட மன்றஉறுப்பினராக தேர்தெ டுக் கப்பட்ட பிறகு தன்னு டைய தொகுதிக்கு சென்றார். அப்போது என்னை பெரும் பான்மையான இந்துக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகை யால் இந்துக்கள் மட்டுமே என் னிடம் குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என்று கூறினார். மேலும் தன்னுடைய அலுவ லகத்திற்குபர்தா மற்றும்குல் லாய்அணிந்துகொண்டுயாரும் வரவேண்டாம்என்றும் கூறி பெரும் சர்ச்சைக்குள் ளானவர். இந்த நிலையில் இவர் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார். கவுரிலங்கேஷ், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவுவாதிகள் கொல்லப்பட்டது குறித்து அவர்களது பெயர்களைக் குறிப்பிடாமல்பேசியபசன கவுடா இந்தியாவில் இந்துக் களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்துக்கள் குறித்து அதிக விமர்சனம் செய்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். இந் துக்களுக்கு எதிராக பேசுவது ஏதோ அறிவாளித்தனமான ஒன்று என்று நினைக்கின்றனர்.

இண்டலக்சுவல், பகுத் தறிவு,கருத்துச்சுதந்திரம்என்ற பெயரில்நமதுநாட்டிற்கும், நாட்டின் இறையாண்மைக் கும், நமது ராணுவத்திற்கும் எதிரானகருத் துகளை தொடர்ந்துபேசி வருகின்றனர். அப்படிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர் களே? நான் உள்துறை அமைச் சராக இருந்தால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சுயமாக சிந்தித்து கருத்துக் கூறுபவர்களை சுட்டுக்கொலை செய்ய உத்தரவிடுவேன்'' என்று கூறினார்.

கருநாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்பகுத்தறிவாளரும்,மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளி யும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அதே போல் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே போன்றோரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளில் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பும், அதன் துணை அமைப்பான இந்து சுரக்ஷா மஞ், இந்து ஜன ஜாகிருதி என்ற அமைப்புகள் செயல்பட்டு வந்தன. கவுரி லங்கேஷ் கொலையில் பிடி பட்ட அனைவருமே இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner