எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அய்தராபாத், ஆக. 4  பாஜக கட்சியைச் சேர்ந்த ராஜா சிங்  என்ற சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ரோகிங்கியா மற்றும் வங்காளதேச இசுலாமி யர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கோஷமஹால் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங். தீவிர இந்துத்துவவாதியான இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், நாடா ளுமன்றத்தில் ரோகிங்கியா அகதிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பாக இவர் சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அவர் பேசிய தாவது:

அய்தராபாத்தில் பல ரோகிங்கியா இசுலாமியர்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ள னர். அதிலும் மஜிலிஸ்-இ-இத்திஹாதுள் முசுலீமான் சட்டமன்ற உறுப்பினர்களின்  தொகுதிகளில் இவர்கள் அதிக மாக உள்ளனர். அவர்களுக்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். ரோகிங்கியா இசுலாமியர்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். தெலங்கானாவும்,நாடும்  பாது காப்பாக இருக்கவேண்டுமென் றால், முதல்வர் சந்திரசேகர் ராவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும். இல் லையென்றால் அவர்கள் நாட் டிற்கு தலைவலியாக மாறி விடு வார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோகிங்கியா மற்றும் வங்காளதேச இசுலாமியர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.முன்ன தாக, ராஜஸ்தானில்ஒருவரை பொதுமக்கள்அடித்துக் கொன் றது குறித்து கருத்து தெரிவித்த ராஜா சிங், பசு வதையை தடுக்கவில்லையென்றால் இப் படித்தான் நடக்கும் என அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீசை வைத்துக் கொண்டதால் தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட இளைஞர்

சூரத், ஆக. 4 குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பவ்லா மாவட்டத்தில் இருக்கும் கவிதா கிராமத்தில் புதியதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ராமன்பாய்ராம்ஜீமக்வானா  என்றதாழ்த்தப்பட்டஇளை ஞரை சார்ட்ஸ் அணிந்ததற்காக வும், மீசை வைத்துக் கொண் டதிற்காகவும் அப்பகுதியில் வசித்து வந்த தர்பார் ராஜ்புத் இனத்தினை சேர்ந்தவர்கள் தாக் கியுள்ளனர்.

மக்வானா பதிவு செய்த புகாரின் பேரில் இதுவரை அய்ந்து நபர்களை கைது செய்து முதல் தகவல் அறிக்கையினை சமர்பித்திருக்கிறது காவல்துறை.

தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னை தாக்கியதாக, பதிலிற்கு ராஜ்புத் இனத்தவர் ஒருவர் நான்கு பேர் மீது புகார் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகமதாபாத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கிய செய்தி பெரும் விவா தத்திற்கு வழி வகை செய்தது.

மீண்டும் இது போன்று ஜாதி யியல் ரீதியான பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய காவல் துறை அக்கிராமத்தினை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner