எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை ஆக.4 சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரம ணியை மத்திய அரசு நியமித்துள்ளதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பேனர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி தகில் ரமணி, 1982 ஆ-ம் ஆண்டு முதல் மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங் கினார். 2001 ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் 26 தேதி மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பல சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner