எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சண்டிகர், ஆக. 12 -இலவசக் கல்வி வழங்கும் குரு குலங்களுக்கு, அரசு சார்பில் இலவச நிலம் வழங்கப்படும் என்று அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். மேலும், இலவசக் கல்வி வழங்கும் குரு குலங்களுக்கு அவற்றை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசுத் தரப்பில் செய்துதரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘‘தற்காலத்தில் குரு குலக்கல்வி ஏற்றதுதானா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று கட்டார் பேசியுள்ளார். அப்போது, வாசிப்பு, எழுத்து, கணக்கு, யோகா மற்றும் தேசபக்தி ஆகியவை குரு குலக்கல்வியில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், அந்த வகையில், இலவசக் கல்வி வழங்கும் குருகுலங்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் அறிவிப்பில் சூழ்ச்சி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதாவது, குரு குலம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு அரசு நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும் தந்திரம் அடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நாள்...இந்நாள்...

1919 - லண்டன் நாடாளுமன்றக் குழுவின் முன் சர்.கே.வி.ரெட்டி (நாயுடு) ‘திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முதல் முழக்கம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner