எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக.12 ‘நீட்' தேர்வு மீண்டும் ஆண் டிற்கு ஒருமுறை நடக்கும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ டேகர் கூறியதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் ‘நீட்' தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, ‘‘அடுத்த ஆண்டு (2019) முதல் ‘நீட்', ஜே.இ.இ. போன்ற தேர்வுகள் ஆண்டிற்கு இரண்டுமுறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறைகளும் கணினி மயமாக்கப்படும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

‘‘கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அவர்களுக்குக் கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். சி.பி.எஸ். இ.க்குப் பதிலாக தேர்வுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை நடத்தும்'' என்றும் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

சுகாதாரத்துறை அமைச்சகம் அதிருப்தி

ஆனால், சுகாதரத் துறை அமைச்சகம் இந்த முடிவில் தங்களின் நிலைப்பாட்டினை அறி வித்திருக்கிறது. ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள் என்று குறிப் பிட்டிருக்கிறது.

பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் ‘நீட்' தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால், பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்வார்கள். அதனால், அவர் களால் ‘நீட்' தேர்வை முழுக் கவனத்துடன் எழுத இயலாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது சுகாதாரத் துறை அமைச்சகம்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ‘நீட்' தேர்வையும் சி.பி.எஸ்.இ.தான் நடத்த இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை மட்டும் நடைபெற இருக்கும் அத்தேர்வு மய்யங்களில், எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

ராணுவ வீரர்களின் தியாகத்தை மீண்டும் அவமதித்த பாஜக எம்.பி.

லக்னோ, ஆக. 12 -வீரமரணம் அடைந்த ராணு வத்தினரை, பாஜக எம்.பி. நேபாள் சிங் மீண் டும் அவமரியாதை செய்து, சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், புல்வானா பகுதி யிலிருந்த இந்திய பாதுகாப்புப் படை முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சிலர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து, அப்போது கருத்துதெரிவித்த பாஜக தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி எம்.பி.யுமான நேபாள் சிங், ராணுவம் என்றால் வீரர்கள்மரணம் அடைவது வழக்கமான ஒன்றுதான் என்றும், சண்டையின்போது ராணுவ வீரர்கள்மரணம் அடையாத நாடு எங்கிருக்கிறது? என்றும் அலட்சியமாக கூறியிருந்தார்.

இதுவரை துப்பாக்கிக் குண்டுகளை சமாதானப்படுத்தி, ராணுவ வீரர்களின் தாக்கு தலைத் தடுத்து நிறுத்தும் கருவி எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் கேலி பேசி யிருந்தார்.

நேபாள் சிங்-கின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தவுடன், மன்னிப்புக் கேட்ப தாகக் கூறி பின்வாங்கினார்.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற இடத்தில், நேபாள் சிங் மீண்டும் ராணுவ வீரர்களை அவமரியாதையாக பேசியுள்ளார்.

ஏற்கெனவே பேசியதுபோல, ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் இறக்கத் தான் நேரிடும்; ராணுவ வீரர்கள் இறக்காத நாடு ஒன்றுகூட இல்லை; இறப்பில் இருந்து தப்பிக்கும் சாதனமும் இல்லை என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்தப் பேச்சு மீண்டும் கண்ட னத்திற்கு உள்ளாகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner