எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேசம் தியோரியாவில் காப்பகத்தில் இருந்த சிறுமியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட் படுத்தப் பட்டனர். அந்தக் காப்பகத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறு கடந் தாண்டே அதி காரிகளுக்கு ஆணை பிறப்பித்தேன். ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டார்கள் என்று கூறுபவர் குப்பனும், சுப்பனும் அல்ல. உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

(அப்படி என்றால், இவர் முதலமைச்சராக இருக்க லாயக்கற்ற - நிர்வாகத் திறனற்ற பேர்வழி என்றுதானே பொருள்!)

சுற்றிவளைத்து மூக்கைத் தொடுகிறார்கள்

குருகுல முறையில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி யளிக்கும் நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும் - இவ்வாறு கூறியிருப்பவர் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் (பி.ஜே.பி.).

(பார்ப்பனீய, சமஸ்கிருத, குலக்கல்வி என்பதை வெளிப் படையாக சொல்லாமல் சுற்றி வளைத்து மூக்கைத் தொடு கிறார்கள், புரிகிறதா?)

65% இளைஞர்கள்

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுள் 65 விழுக்காட்டினர் இளைஞர்கள்.

(துடிப்பு இருக்கலாம் - ஆனால், அது மரணத்தில் கொண்டு போய்விடும் முரட்டுத்தனம் கூடாது)

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு

அரசு சம்பளம்

யோகி ஆதித்யநாத் தலைமையில் பி.ஜே.பி. ஆளும் உ.பி. மாநிலத்தில், அரசின் நலத் திட்டங்களைப் பிரச்சாரம் செய்ய 822 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உண்மை என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு அரசுப் பணத்தில் வேலை வாய்ப்புதான் - இதனை உ..பி. மேனாள் முதலமைச்சர் மாயாவதியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமித்ஷாவின் பிரகடனம்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் இருக்கிறோம் என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் அமித்ஷா.

(அது சரி, ஒட்டுமொத்த பி.ஜே.பி. அரசை காலி செய்ய மக்கள் இருக்கிறார்களே!)

தயார்! தயார்!

மகாராட்டிரத்தில் பி.ஜே.பி. ஆட்சியைத் தீர்த்துக் கட்ட காங்கிரசு அணியில் சரத்பவார், மாயாவதி தயார்!

(சபாஷ், சரியான அணுகுமுறை - இன்னும் விரிவாகட்டும் - பி.ஜே.பி. எதிர்ப்பு முன்னணி)

மோடிக்கு மூக்கறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் ஆட்சேப கரமாகப் பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

(ஒரு பிரதமருக்கே இந்த நிலை - பொதுவாக இதுபோல் நடப்பது கிடையாது; இவ்வளவுக்கும் அவையை நடத்திய வெங்கையா நாயுடு அவர்களின் கட்சிக்காரர் - அவரே நீக்கியிருக்கிறார் என்றால், ஒரு பிரதமரின் பேச்சு எந்தத் தரத்தில் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா!)

இன்றைய ஆன்மிகம்?

இதுவும் ஓர் ஆதாரமோ!

நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்ட்டுக்கு அருகில் ‘ஸ்வயம்பு' என்ற மலைப்பகுதியில் குரங்கு கோவில் ஒன்று உள்ளது. குரங்குகள் அதிகளவில் காணப்படும் இந்த மலைக் கோவிலின் கருவறைக்குள் குரங்கு ஒன்றே கடவுளாகக் காட்சி தருகிறதாம். குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன்தான் மனிதன் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner