எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான போராட்டத்தில் அப்பாவிகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் - எந்த விதிகளும், நியதி களும் பின்பற்றப்படாத நிலையில், வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு ஒப்படைத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தது - வரவேற்கத் தக்கதாகும். ராஜாவை மிஞ்சிய விசுவாசி களாக அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டாம் என்று   திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 13 பேர் என்பது மிகப்பெரிய அவலம்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு

ஆணை பிறப்பித்தவர்கள் யார்?

அதில் முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆணை வழங்கியவர் யார் என்பது இதுவரை புலப்படவே இல்லை.

துப்பாக்கிப் பிரயோகத்தில் வழக்கமாகக் கடைப் பிடிக்கும் எச்சரிக்கைகள் - நடவடிக்கைகளும்கூட பின்பற்றப்படாத அராஜக தர்பார்தான் அங்கு நடந் துள்ளது என்பதை தொலைக்காட்சிகள் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டின.

வானத்தை நோக்கிச் சுட்டு கூட்டத்தைக் கலைத்தல், தவிர்க்க முடியாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அசாதாரண நிலைமை ஏற்பட்டால், கணுக்கால் கீழ் நோக்கிச் சுடுவது போன்ற முந்தைய வழமைகள் எதுவுமே கடைப்பிடிக்காது - திட்டமிட்ட ஏற்பாடுபோல் கூட்டத்தில் உள்ளோரைக் குறி வைத்து சுட்டுள்ள கோரத் தாண்டவம் மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதே!

பலியானவர்களின்

குடும்பத்தவர்கள் குமுறல்!

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாம் சென்றபோது, அவர்கள் கண்ணீரும், கம்பலையுமாக  நம்மிடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. ‘‘உயிரிழந்த பலரும் போராட்டத்தில்கூட ஈடுபடாமல் சென்ற அப்பாவிகள்; ஒரு சிலர் காய மடைந்தோரைக் காப்பாற்ற முனைந்தபோது துப்பாக்கிக் குண்டு துளைத்து உயிர் இழந்துள்ளார்கள்'' என்பதை நம்மிடம் நன்கு விளக்கினார்கள்.

அதுபோலவே, படுகாயமடைந்து மருத்துவமனையில் இரண்டு வார்டுகளில் தங்க வைத்தவர்களைக்கூட துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயம் என்பதை மறைத்து, மருத்துவமனை சிணீsமீ ஷிலீமீமீt இல் எழுதி வைத்துள்ள கொடுமையான, வேதனைபற்றி மிகவும் துயரம் பொங்கவும் நம்மிடம் கூறினார்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின்

சிறந்த தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசாரித்து,   வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு மாற்றி யுள்ளது - அனைவராலும் மிகவும் வரவேற்கப்படும் ஒன்று என்பது நிச்சயம்.

ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணையும் ரத்து செய்யப்படல் வேண்டும்; மக்களின் சந்தேகம் வலுத்த வண்ணம் உள்ளது.

மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கினை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதும் மிகவும் வரவேற் கத்தக்கதாகும்.

பேச்சுரிமை - கருத்துரிமைப் பறிப்பு!

மனித உரிமை, ஜனநாயகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படுவதை உயர்நீதிமன்றம் இதன்மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆங்காங்கு கட்சிகள் - இயக்கங்கள் ஊர்வலங் களுக்குத் தடை (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வுக்கு - மட்டும் விதிவிலக்கு).

சாதாரண கூட்டங்களைக் கூட, நடத்திடத் தடை விதிப்பது, ‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை' அமலில் உள்ளதுபோன்ற ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. இது தேவையா?

நீதிமன்றங்களின் நீதிச் சக்கரம் சரியாக சுழலுவதனால் தான் அநீதிகளும், சட்ட துஷ்பிரயோகங்களும் தடுத்து நிறுத்தப்பட முடிகிறது!

ராஜாவை மிஞ்சிய விசுவாசிகளாக

நடந்து கொள்ளாதீர்!

எவருக்கும் ஆட்சி நிரந்தரமல்ல; ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாகவும் மாறி மாறி வருவதுதான் மக்களாட்சி - ஜனநாயகம்!

காவல்துறை அதிகாரிகளும், மற்ற பொறுப்பான வர்களும் ‘‘ராஜவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக'' நடந்துகொள்ளாமல், மனச்சாட்சியோடு நடந்து கொள்வது அவசியமாகும்!

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை    
17.8.2018       

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner