எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி ஆக.17 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டமன்றத் தேர் தலில் ஆளும் பாஜக ஆட்சியை இழக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு காங்கிரசு அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் இந்தத் தேர்தல்கள் நடக்கவுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரசு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பா.ஜ.க.வும் ஆட்சியை தக்கவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி ஓட்டர் அமைப்பும் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இதன் முடிவுகளை  வெளியிட்டுள்ளது. அதில் 3 மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சி அமை யும் என்றும், பாஜக படுதோல்வி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மத்தியப் பிரதேசத் தில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் தலை மையிலான அரசு படுதோல்வியை சந்திக் கவுள்ளது. 2013  தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 165 இடங்களைக் கைப்பற்றியது. கருத்துக் கணிப்பு முடி வின்படி இக்கட்சி 59 இடங்களை இழந்து 106 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். காங்கிரசு 117 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை வசுந்தரராஜே மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 163 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை வெறும் 57 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ளது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. காங்கிரசு கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தலைமையிலான ஆட்சி இந்த முறை தோல்வியை தழுவும். 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு போதுமான பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். காங்கிரசு குறைந்தபட்சம் 54 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner