எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஆக. 6- பாஜக ஆளும் மத் தியப்பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட மாணவர்கள் இருக்கும்போது, அவர்களிடையே இந்து மத நம்பிக்கையின்படி, சிவலிங்கத்தின் உருவத்தை களிமண்ணில் செய்து வழிபாடு நடத்த வேண்டும் என்று பள்ளியின் சார்பில் மாணவர்களிடம் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போபாலில் உள்ள அரசு கமலா நேரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் சிவ லிங்க உருவத்தைச் செய்து, வழிபாடு செய்யவேண்டும் என்றும், அப்படி செய்பவர்கள்தான் அதிக மதிப்பெண் களைப் பெற்று தேர்ச்சி பெறுவார்கள் என்றும் மாணவர்களிடம் பள்ளியின் தலைமையாசிரியர் கூறியுள்ளார்.

அரசு கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் போது, குறிப்பிட்ட இந்து மத நம்பிக் கைகளை பிற மதத்தவர்கள்மீது திணிப் பதை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. முசுலீம் மதத்தைச் சேர்ந்த மாணவியர் பலரும் லிங்க உருவத்தைச் செய்து வழிபாடு செய்ய மறுத்துவிட் டனர். உருவ வழிபாடு முறை முசுலீம் மதத்துக்கு எதிரானது என்பதால், லிங்க உருவத்தைச் செய்து வழிபாடு நடத்த மாணவியர் மறுத்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் கல் வித்துறை அலுவலர்கள் முன்னிலையில் மாணவர்கள் லிங்க உருவத்தைச் செய்து காட்டி, வழிபாடு நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள் ளது. அரசுப்பள்ளி வளாகத்தில் குறிப் பிட்ட மதத்தைச் சார்ந்து லிங்க உரு வத்தை செய்யக்கட்டாயப்படுத்தி, வழி பாடு நடத்த மாணவர்களைக் கட்டாயப் படுத்தியுள்ளனர்.

அரசு கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் நிஷா காம்ராணி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், மாணவர்களை லிங்க உருவத்தைச் செய்யக் கட்டாயப்படுத்தி யுள்ளார்.

நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், லிங்க உருவத் தைச் செய்து பக்தி சிரத்தையுடன் மாண வர்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர் நிஷா காம் ராணி கூறியுள்ளார்.

ஒரு மாணவி கூறும்போது, “இது போல் நாங்கள் செய்ய வேண்டும் என் பதை முன்அறிவிப்பின்றி திடீரென்று செய்யுமாறு கூறுகிறார்கள். குறிப்பிட்ட மத நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்தால் போதும் என்று கூறவில்லை. ஆனால், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றால் மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்” என்றார்.

மற்றொரு மாணவி கூறும்போது, “நாங்கள் அந்நிகழ்வில் பங்கேற்க மறுத் தோம். எங்கள் மத நம்பிக்கைகளுக்கு உருவ வழிபாடு எதிரானதாகும். எங்க ளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று கூறினார்கள்” என்றார்.

வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட மாணவர்கள் படிக்கின்ற பள்ளியில் முசுலீம் மாணவியர் லிங்க உருவ வழிபாட்டில் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கின்றனர் என்பதை பள்ளி நிர்வாகத்தினர் அறிந்து, அம்மாணவி யரை தனியே ஓர் அறைக்கு சென்று அமருமாறு கூறிவிட்டார்கள்.

அதன்பின்னர் அந்த அறையை மூடித் தாளிட்டுவிட்டார்கள். அதன்பின் னர் முசுலீம் மாணவியர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, பின் னர் அம்மாணவியரை விடுவித்து வீட் டுக்கு செல்ல அனுமதித்தார்கள்.

பூஜைகளுக்கு உகந்த மாதம் சவான் மாதம் என்று கூறி பள்ளிகளில் பூஜை களைச் செய்வதில் ஆசிரியர்கள் கட்டா யத்தின் பேரில் கலந்து கொண்டபோதும், அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட மதம் சார்ந்த செயல் பாடுகளை பள்ளிகளில் அரசே கட்டா யப்படுத்தி நடத்துவது என்பது சற்றும் ஏற்கக் கூடியதல்ல என்று ஆசிரியர் ஒரு வர் வேதனையுடன் கூறினார்.

மற்றொரு ஆசிரியர் ஒருவர் கூறும் போது, இதுபோன்ற செயல்பாடுகளால் மாணவர்களில் சிலருக்கு இக்கட்டான நிலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நாள் முழுவதும் வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிக்கு வந்தவர்கள் பெரிதும் ஏமாற் றத்துடன் வீடு திரும்பினார்கள் என்றார்.

லிங்க உருவத்தை களிமண்ணில் செய்து மாணவர்கள் வழிபாடு செய்த பின்னர்    பன்தாரா (விருந்து)  அளிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் பாஜக அரசின் இந்துத்துவா திணிப்பால் மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner