எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மும்பை, பிப். 28 -பஞ்சாப் நேசனல் வங்கியில் நீரவ் மோடி மேலும் ரூ. 1,322 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நீரவ் மோடி, அதிகாரப்பூர்வமாக மோசடி செய்த தொகை, ரூ. 11 ஆயிரத்து 360 கோடி என்ற நிலையில், அந்த விவரங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளியாகி வந்தன. ஆனால், அதி காரப்பூர்வமற்ற வகையிலும், நீரவ் மோடி- மெகுல் சோக்ஸி ஆகியோர் ரூ. 1,322 கோடியை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பங்கு பரிமாற்றத்தில் அதிகாரபூர் வமற்ற பரிவர்த்தனை மூலம், இந்த மோசடி நடந்துள்ளதாகவும், இதன்மூலம், பஞ்சாப் நேசனல் வங்கியிலிருந்து நீரவ் மோடி அடித்த கொள்ளை ரூ. 12 ஆயிரத்து 622 கோடியாக உயர்ந்துள்ளது, என்றும் பஞ்சாப் நேசனல் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் 2- ஆவது பெரிய வங்கியான பஞ்சாப் நேசஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கீதாஞ்சலி குரூப் கம்பெனிகளின் முதலாளியும், குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியுமான நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி மோடி, சகோதரர் நிஷால், சித்தப்பா மொகுல் சோக்ஸி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, இந்த மோசடியை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சி.பி.அய். மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நீரவ் மோடியின் மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 6 வங்கி அதிகாரிகள் உள்பட 14 பேரை சிபிஅய் கைது செய்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner