எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்பு சகோதரர் மாண்புமிகு- மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 65 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று!

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரியதொரு ஆலமரத்தின் ஆற்றல் மிக்க வீரிய விழுதுகளில் பலமான விழுது நமது சகோதரர் தளபதியாவார்!

உழைப்பில் தேனீ, பழகுவதற்கு உன்னதமானவர். வயது ஏற ஏற அவரது முதிர்ச்சியும் பக்குவமும் வியக்கத்தக்க வித்தகங்களாக வளர்ந்து வருவது, பொது வாழ்வுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு.

காட்சியாகவும்,  சூழ்ச்சியாகவும் இருக்கும் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, மீட்சியாக்கிடும் மிகப் பெரும் பொறுப்பு இன்று அவருக்குரியது.

அவர் மானமிகு சுயமரியாதைக்காரரான நமது கலைஞரால் பெரிதும் செதுக்கப்பட்டவர் ஆன தால், இதனை இதனால் இவர் முடிப்பார் என்ற குறளின் இலக்கணத்திற்கு, இலக்கியமாகத் திகழ் பவர். சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் இன்று நேர்ந்திடும் ஆபத்து களிலிருந்து காக்க களம் பல  காண வேண்டி, நலத்துடன் நீடுழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்.


சென்னை                                                                                 தலைவர்
1-3-2018                                                                               திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner