எழுத்துரு அளவு Larger Font Smaller Font


போபால், மார்ச் 1 மத்தி யப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடந்த சட்ட சபை இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வியடைந் துள்ளது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப்பிரதேசம் மாநிலத் தின் மங்காவுலி மற்றும் கொலாரஸ் சட்டசபை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் கடந்த 24ஆ-ம் தேதி நடை பெற்றது. மங்காவுலி தொகுதி இடைத்தேர்தலில் 22 பேரும், கொலாரஸ் தொகுதி இடைத் தேர்தலில் 13 பேரும் போட்டியிட்டனர். இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கொலா ரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர சிங் யாதவ் 82,515 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் தேவேந் திர குமார் ஜெயின் 74,432 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 8083 வாக்குகள் வித்தி யாசத்தில் காங்கிரஸ் வேட் பாளர் வெற்றி பெற்றார்.

மங்காவுலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரஜேந் திர சிங் யாதவ் 70,808 வாக்கு களும், பா.ஜ.க. வேட்பாளர் பாய்சஹாப் யாதவ் 68,684 வாக் குகளும் பெற்றனர். இதன் மூலம் 2124 வாக்குகள் வித்தி யாசத்தில் காங்கிரஸ் வேட் பாளர் வெற்றி பெற்றார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இரு சட்டசபை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஒடிசா

ஒடிசா மாநிலம் பிஜேபூர் சட்டசபை தொகுதி உறுப்பின ராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சுபால் சாஹு மரணமடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் ரிதா சாஜு, பா.ஜ.க சார்பில் அஷோக் பனிக்ராஜி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரனாய் சாகு போட்டியிட்டனர்.

பிஜு தனதா தளம் வேட்பாளர் ரிதா சாஜு 1,02,871 வாக்குகள் பெற்று சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார்.

பா.ஜ.க வேட்பாளர் 60,938 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 10,274 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner