எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, மார்ச் 1 மாநில அரசை தரக்குறைவாக பேசுவதுடன், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல என்று முதல்- அமைச்சர் சித்தராமையா தெரிவித்துள் ளார்.

கருநாடக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், 10 சதவீத கமிசன் பெற்று வரு வதாகவும், பணம் கொடுக்கா விட்டால் எந்த வேலையும் நடக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந் தார்.
இதுகுறித்து கொப்பலில் நேற்று முதல்- அமைச்சர் சித்தராமையாவிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பி னார்கள். இதற்கு பதிலளித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காங்கிரசு அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், 10 சதவீத கமிசன் பெறுவதாகவும் பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறி வருகிறார். காங்கிரசு ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவது சரியல்ல. ஒரு மாநில அரசு மீது குற்றச் சாட்டு கூறும் போது, அதற் கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அப்படி ஆதாரத்துடன் குற்றச்சாட்டை கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அரசு மீது பிரதமர் கூறும் பொய் குற்றச் சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கருநா டகத்திற்கு 3 முறை வந்துள்ள பிரதமர், இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.

பிரதமர் பதவியில் இருந்து கொண்டு மாநில அரசை தரக்குறைவாக பேசுவது, அந்த பதவிக்கே அழகில்லை. லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளனர். அவர் களை பிடிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத் துள்ளது?. கருநாடக அரசிடம் அமித்ஷா அடிக்கடி கணக்கு கேட்டு வருகிறார். கருநாடக மக்கள் கணக்கு கேட்டால், அது அவர்களது உரிமை. அவர்களுக்கு கணக்கு சொல்ல தயாராக உள்ளேன். அமித்ஷாவுக்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசிய மில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner