எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கான்பூர், பிப்.2 உ.பி., மாநிலம், கான்பூரைச் சேர்ந்த, 'ரோட்டோமேக்' பேனா தயாரிப்பு நிறுவனத்தின் மோசடியை தொடர்ந்து, அந்நகரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம், வங்கி யில், 3,972 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ரோட்டோமேக்' நிறுவனம், வங்கி களில் கடன்வாங்கி மோசடி செய்தது, சமீபத்தில் தெரிந்தது.அந்நிறுவனம், 3,695 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளதாக, வங்கிகள் தெரிவித்து உள்ளன.

கான்பூரைச் சேர்ந்த, ஜவுளி மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் ஈடுபட்டுள்ள, 'சிறீ லக்ஷ்மி கோட்சின் லிமிடெட்' என்ற நிறுவனம், 15 வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக, தற்போது தெரிய வந்துள்ளது. இவ்வாறு, 3,972 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த கடனை வசூலிப்பதற்காக, அந்நிறுவனத் தின் மூடப்பட்ட பிரிவுகளை விற்பதற்கான முயற்சியில், வங்கிகள் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பாக, தேசிய கடன் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner