எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, மார்ச் 2  பெங்களூருவில் நேற்று முதல்-அமைச்சர் சித்தராமையா நகர்வலம் சென்றார். அரசு பேருந்தில் சென்ற அவர் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி விவரம்:

பெங்களூரு நகரை பாதுகாப்போம் என்று பா.ஜனதாவினர் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள். பெங்களூரு மாநகராட்சி யும் பா.ஜனதாவிடம் தான் இருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மாநகராட்சியில் எப்படியெல் லாம் ஊழல் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகளை அடமானம் வைத்தார்கள். மாநகராட்சி வருவாய் முழுவதையும் கொள்ளையடித்தார்கள்.

அவர்கள் அடமானம் வைத்துவிட்டு சென்ற சொத்துகளை காங்கிரஸ் கட்சி மீட்டுள்ளது. தற்போது பெங்களூருவை காப்போம் என்று பா.ஜனதாவினர் கூறு கிறார்கள். அவர்கள் பாதுகாத்தார்களா?. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு தற்போது பாதயாத்திரை செல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள். பா.ஜனதா வினர் மேற்கொள்ளும் பாதயாத்திரை யால், யாருக்கும் பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் அரசு மீது பா.ஜன தாவினர் பொய் குற்றச்சாட்டுகளை கூறு வதை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு முதல் அமைச்சர் சித்த ராமையா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner