எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடெல்லி, மார்ச் 2 நீரவ் மோடி பாணியில், மற்றொரு நகை வியாபாரி, வங்கிகளில் ரூ.6,712 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட தாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வைர வியாபாரி நீரவ் மோடி, அவருடைய தாய் மாமா மெகுல் சோக்சி ஆகியோரது பாணியில் ஜதின் மேத்தா என்ற நகை வியாபாரி, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் உத்தரவாத கடிதம் அடிப் படையில் தங்கம் இறக்குமதி செய்தார். துபாயில் உள்ள 13 நிறுவனங்களுக்கு தங்க நகை களை ஏற்றுமதி செய்தார். ஆனால், பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

இப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளை ரூ.6 ஆயிரத்து 712 கோடி அளவுக்கு ஏமாற்றி உள்ளார்.

இதுதொடர்பாக, ஜதின் மேத்தா மீது சம்பந்தப்பட்ட வங்கிகள், கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.அய்.யிடம் புகார் தெரிவித்தன. மும்பை பொருளா தார குற்றப்பிரிவு காவல்துறையினரிடமும் புகார் அளித்தன.

ஆனால், சி.பி.அய்.யோ, மும்பை காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி புதிதாக ஒரு புகாரை பெற்று, ஏப்ரல் 5-ஆம் தேதி சி.பி.அய். 6 வழக்குகளை பதிவு செய்தது.

அதற்குள், 2016-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி, ஜதின் மேத்தாவும், அவருடைய மனை வியும் தங்களது இந்திய குடியு ரிமையை துறந்துவிட்டு, வெளி நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். வரி பிரச்சினையே இல்லாத செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகளின் குடிமக்களாக குடியேறி விட்டனர். அந்நாட்டுடன், நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப் படாததால், அவர்களை இந்தியா வுக்கு கொண்டுவர முடியாது.

இந்த மோசடியுடன், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த வங்கி மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.39 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner