எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மார்ச் 3 வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 3) எண்ணப்பட்டு வரு கின்றன.

திரிபுராவில் பிப்., 18 ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்.,27 ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது.

முன்னிலை நிலவரம்

மேகாலயா    :  காங்., - 24  என்பிபி - 13 பா.ஜ.க., - 8 மற்றவை -14
திரிபுரா    :  இடதுசாரிகள் - 19 பா.ஜ.க., கூட்டணி -40 காங்., - 0 மற்றவை - 0
நாகாலாந்து:  என்பிஎப் - 24 பா.ஜ.க., கூட்டணி - 30  காங்., - 0 மற்றவை -4

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner