எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 3 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அடுத்தகட்ட நட வடிக்கை எடுப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (3.3.2018) காலை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலேசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்.22 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலை மையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கப் பிரநிதிகளையும் டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்கவேண்டும் என்று நிறைவேற்றப்பட்டது.

பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டு ஒருவார காலமாகிவிட்ட நிலையில் இதுவரைவில் எவ்விதத் தகவலும்கிடைக்கவில்லைஎன்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதற்கி டையே இன்று (3.3.2018) நடைபெற்ற ஆலேசனைக் கூட் டத்தில் காவிரி விவ காரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதலமைச்சர் தெரி வித்தார்.

துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ள தாக அவர் தெரி வித்துள்ளார். ஓபிஎஸ், முதல் வர் பழனிசாமியை தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார். இதையடுத்து சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தாம் வலியுறுத்தியுள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து வருகின்ற திங்கள்கிழமைவரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து அழைப்பு வராவிட்டால் வருகிற 8 ஆம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழர்களுக்கு அவமானம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்துக் கட்சியினரை சந்திக்க மறுத்தால் அதிமுகவின் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேரும், திமுகவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் உள்ளிட்ட தமிழகஎம்.பிக்கள்ராஜினாமாசெய்ய வலியுறுத்துவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner